312 கந்தவேள் கதையமுதம் தருளிச் சூரபன்மாவை விரைவில் அழித்தாக வேண்டும்' என்று எண்ணிக் கீழ்வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தார். கயமுகன் வதை அந்தத் திசையில் கயமுகன் என்ற அசுரன் காவல் காத்து நின்றான். அவனுக்கு ஆயிரம் யானை முகம். வீரவாகு தேவரைக் கண்டவுடன் அவன் எதிர்த்தான். இருவருக்கும் பெரும்போர் முண்டது. அவன் வீரவாகு தேவரைப் பார்த்து, 'மற்ற வாசல் காவல்களை நீக்கி நீ எப்படி இங்கே வந்தாய்? உனக்கு ஏதாவது மாய வித்தை தெரியுமா? என்னுடைய ஆணை இல்லாமல் நீ இந்த வாயிலைக் கடந்து உள்ளே போக முடியாது. இந்த நகரத்தின் காவல் படையின் திறனை நீ அறியாதவன் போலும் ! அதுதான் வந்து விட்டாய்" என்று சொல்லி எதிர்த்தான்; ஒரு பெரிய மலையை எடுத்து வீரவாகு தேவர் மீது வீசினான். அந்த மலை தேவரின் தோளில் பட்டவுடன் பொடிப்பொடியாகப் புழுதியாகப் போய் விட்டது. அப்படி அது பொடியானதற்கு ஓர் உவமை கூறுகிறார் கச்சி யப்ப சிவாசாரியார். அவரவர்கள் தம் தம் மனப்போக்குக்கு ஏற்றபடி உவமை சொல்வார்கள். இங்கே, ஒரு விபூதி உருண்டை பொடிப் பொடியாகப் போனதுபோல் மலை பொடியாயிற்று என்கிறார். விபூதி, ருத்திராட்சம் என்று சிவபெருமானோடு சார்ந்தவற்றை நினைக்கின்ற அவருக்கு இங்கே உவமைக்கு விபூதி உருண்டை நினைவு வருகிறது. வேழத் தோல்முகன் விட்ட பூதரம் பாழித் தோள்மீசை பட்ட காலையில் வாழிப் பூதியின் வட்டு விண்டெனப் பூழித் தாகி உடைத்து போயதே. (நயமுகன் வதை. 24.) (வேழத் தோல் முகள் - யானை முகமுடையவன். பூதரம் - மலை. பாழி - வலிமை. பூதியின் வட்டு - விபூதி உருண்டை. பூழித்தாகி -பழுதியை உடையதாகி; பொடிப் பொடியாகி.] மறுபடியும் பல மலைகளை எடுத்து வீரவாகு தேவர் மீது வீசினான் அந்த அசுரன். அவை யாவும் அவருடைய தோளில் பட்டுப் பொடியாகப் போயின்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/332
Appearance