வீரவாகுவின் வீரச் செயல்கள் ஆச்சரியம் மிகுதியாயிற்று. தேவலோகத்திலிருந்த 315 பொருள் களையும் கூடத் தன்னுடைய வலிமையினால் அபகரித்துக்கொண்டு வந்து வைத்திருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் பிரிட்டிஷ் மியூசியம் போயிருந்தேன். அங்கே பல வகையான பொருள்களைப் பார்த்தேன். இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல அருமையான பண்டங்களையும் பார்த்தேன். அப்போது, வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் நாம் பறிகொடுத்த பொருள்கள் அவை என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதுபோல் வீரமகேந்திரபுரியில் சூரபன்மாவுக்கு உரிமையான அண்டங்களில் இருந்த பொருள்கள் மட்டுமல்ல; அவனது வலிமைக்கு அடங்கி, அவனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த அண்டங்களில் இருந்த அருமையான பொருள்களும் அங்கே கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க வீரவாகு தேவருக்கு வியப்பு உண்டாயிற்று. ஆனால் அந்த அண்டங்களில் இல்லாத பண்டங்களும் இருந்தன. அவை யாவை என்பதைச் சொல்கிறார் கக்சியப்பர். உரைசெய் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் உளவாம் கரையில் சீரெலாம் தொகுத்தனன் ; ஈண்டவை கண்டாம்; தருமம் மெய்அளி கண்டிலம்; அவற்றையும் தந்து சுரர்கள் தம்முடன் சிறையிலிட் டான்கொலோ சூரன்? (நகர்புரு.8.) [கரை இல் - எல்லை இல்லாத. அளி - அன்பு. தந்து - கொண்டுவந்து.] அங்கே தர்மம், சத்தியம், அன்பு என்ற மூன்றையும் அவர் காண வில்லையாம். கம்பர், + SE அறம் புகாதந்த அணிநகர் என்று இலங்கையைப் பாடினார். இராவணன் நகரில் தர்மம் உள்ளே புகப் பயந்து ஒழிந்தது என்றார். அதுபோல வீரமகேந்திர புரத்தில் தர்மம், சத்தியம், அன்பு ஆகிய மூன்றுமே இல்லையாம். அவற்றையும் பற்றிக்கொண்டு வந்து தேவர்களோடு சிறையில் வைத்து விட்டானோ?" என்று வீரவாகு தேவர் நினைத்தார். வீரம் இருந்தும், செல்வம் இருந்தும், வேறுவகையான திறல்கள் இருந்தும்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/335
Appearance