316 கந்தவேள் கதையமுதம் சத்தியம், தர்மம், அன்பு ஆகிய மூன்றும் இல்லாமையினாலே முடிவில் அந்தப் பட்டணம் அழிய நேர்ந்தது. ஒரு பிரம்மா இந்த மகேந்திரபுரியை வகுத்திருக்க முடியாது. கணக்கில் அடங்காத பிரம்மாக்கள் வந்து இந்தப் பெரு நகரத்தை அமைத்திருக்க வேண்டும் என்று தேவர் நினைத்தார். ஒரு செல்வர் ஒரு பெரிய காரை வாங்கினார். அவர் மகனுக்குக் கார் விடத் தெரியாது. அதற்காகப் புதியதாகத் தாம் வாங்கிய காரிலா ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ளச் சொல்வார்? முதலில் வேறு ஏதாவது காரில் ஓட்டச் சொல்லிக்கொடுத்துவிட்டு, பிறகு தம் காரை ஓட்டுவதற்கு அவனிடம் கொடுப்பார். அதுபோல, இந்திரன் மகேந்திரபுரியை நிர்மாணிப்பதற்கு முன்னால் அமராவதிப் பட்டணத்தையும், மற்ற மற்றத் தேவர்கள் இருக்கிற இடங்களையும் அமைத்து, நல்ல திறனைப் பெற்ற பிறகுதான் இந்தப் பட்டணத்தை அமைத்திருப்பான்' என்று நினைத்தார் வீரவாகு தேவர். புரந்த ரன்றன துலகமும் ஒழிந்தயுத் தேளிர் இருந்த வானமும் எண்திசை நகரமும் யாவும் வருந்தி இந்நகர் சமைத்திட முன்னரே வண்கை திருந்த வேகொலாம் படை த்தனர் திசைமுகத் தலைவர். (நகர் புகு.13.) [புரந்தரன் - இந்திரன். புத்தேளிர்- தேவர். திசைமுகத் தலைவர் - பிரம தேவர்கள்.] மற்றொரு கற்பனையும் ஆசிரியருக்கு இங்கே தோன்றுகிறது. பானுகோபன் அமராவதிப் பட்டணத்தை எரித்தான் என்று சொல்கிறார்களே, அது வெறும் பொய்க் கதை. இந்த மகேந்திரபுரிப் பட்டணத்தைப் பார்த்து அமராவதிப் பட்டணம் நாணத்தால் தற்கொலை செய்துகொண்டது. அதைச் சொல்லாமல் பானுகோபன் அழித்தான் என்று சொல்கிறார்களே!' என்று சமத்காரமாகக் கச்சியப்பர் ஒரு கற்பனையை அமைக்கிறார். மறக்கொ டும்தொழில் இரவியம் பகைஅழல் மடுப்பத் துறக்கம் மாண்டது பட்டிமை ஆகும்; அத் தொல்லூர் சிறக்கும் இந்நகர் நோக்கியே தன்நலம் தேய்ந்து பொறுக்க ரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம். (நகர் புகு 20.) [இரவியம்பகை - பானுகோபன். தழல் மடுப்ப - எரிக்க, துறக்கம் - அமரா வதி. பட்டிமை - பொய், நான் சட - வெட்கம் ஈடுவதஓல்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/336
Appearance