318 கந்தவேள் கதையமுதம் அசுர மகளிர்கள் தங்கள் குழந்தைகளை எடுத்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் அழுகின்றன. அந்தச் சமயத்தில் சூரியன் அங்கே வருகிறான். உடனே அவர்கள் அந்தக் குழந்தைகளை அவனது தேரில் உட்கார வைத்து, "இவர்களைக் கொஞ்ச தூரம் அழைத்துக் கொண்டுபோய், மறுபடியும் கொண்டு வந்துவிடு' என்று சொல்ல, அந்தக் குழந்தைகள் அழுகையை நிறுத்துகின்றன வாம். சூரியனுடைய தேர் அவ்வளவு எளிதாகப் போய்விட்டது அவர்களுக்கு! மேல்நி லந்தனில் மங்கையர் சிறார்விடா திரங்க ஊனம் இல்கதிர் தேர்வர அவரை ஆண்டுய்த்து வான கந்தனில் சில்லிடை ஏகிநம் மகவைப் மானு வந்துநீ தருகென விடுக்குநர் பலரால். • (நகர் புகு,48, " [மேல் நிலந்தனில் - மேல் மாடியில் இரங்க -அழ. கதிர் தேர் - சூரியனு டைய நேர், உய்த்து - ஏற்றி. கில் இடை சிறிது தூரம். பானு சூரியனே.] அந்த நாட்டில் கிழவர்களே இல்லை. நரை திரை அடைந்து தளர்ந்து நடக்கின்றவர்களையே காணவில்லை. எமனால் இறந்து போகிறவர்களைக் காணவில்லை. நோய் உடையவர்களைக் காண வில்லை. வறுமையினால் வாடுகின்ற ஏழைகளும் அங்கு இல்லை. இப்படி ஓர் இடம் இருப்பது ஆச்சரியம் அல்லவா? எங்கே பார்த் தாலும் கட்டிளங் காளைகள் இருந்தார்கள்; முதியவர்கள் இல்லை. பலம் நிறைந்தவர்கள் இருந்தார்கள்; நோயாளிகள் இல்லை. இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று யோசனை பண்ணினார் வீரவாகு தேவர்.'சூரபன்மா இறைவனை நோக்கிச் செய்த தவத்தின் பயன் இது. தவத்தினால் ஆகாதது எது?' என்று எண்ணி வியப்பு அடைந்தார். நாடி மேல்எழுத் தசையிலா துலறியே நரையாய்க் கோடு பற்றிமுத் தசைந்திடு வோரையும், கூற்றால் வீடு வோரையும், பிணிஉழப் போரையும்,மிடியால் வாடு வோரையும் கண்டிலம்; இதுதவ வலியே! [நாடி-நரம்பு. உலறியே - வறண்டு. கோடுதடி. தளர்பவரை. கூற்றால்-யமனால். விடுவோர் - இறப்போர். நோயால் வருந்துவோர், மிடி வறுமை.) . (நகர் புகு. 58.) அசைந்திடுவோரை பிணி உழப்போர்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/338
Appearance