வீரவாகுவின் வீரச் செயல்கள் 319 இப்படி, குறை இல்லாத நிறைவு ஆகிய நாடு ஆயிற்றே; அதை எதற்காக அழிக்க வேண்டுமென்று நமக்குத் தோன்றும். இங்கே அசுரர்களுடைய அகம்பாவச் செயல்களைக் கச்சியப்பர் காட்டுகிறார். இதோ ஒரு காட்சி. அசுரர்கள் தாம் தீமை செய்வதோடு நில்லாமல் மற்றவர்களையும் தீமை செய்யும்படியாகத் தூண்டுவார்கள். உலகத்தில் யாராவது கெட்டுப்போய்விட்டால் தம்மைப்போலவே மற்றவர்களையும் கெடுக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். அங்கே உள்ள அசுரர்கள் அத்தகைய மனோபாவம் உடையவர்கள். ஆடவர்கள் தம் மனைவி யராகிய அரக்கியர் கொடுத்த கள்ளைக் குடிக்கிறார்கள். அது காம பானம். அவர்களுக்கு வெறி முள்கிறது. அப்போது அவர்கள் வளர்க்கின்ற கிளி அங்கே இருக்கிறது. அது ஆண் கிளி. அதனைத் தம்முடைய கையில் ஏந்திக் கள்ளை அதற்கும் ஊட்டுகிறார்கள். அதனால் அதற்கும் காம நோய் உண்டாகிறது. அப்போது அசுரர்கள் ஓர் அக்கிரமச் செயலைச் செய்கிறார்கள். அந்த ஆண் கிளியை அருகில் இருந்த பெண் அன்னத்தோடு இணையச் செய்யும் கொடுமையைச் செய்கிறார்கள். பாவம்! அந்தப் பெண் அன்னத்தின் கணவனாகிய ஆண் அன்னமோ மிகவும் வருந்துகிறது. இப்படி ஓர் இனத்தை மற்றோர் இனத்தோடு இணைத்து அக்கிரமம் நடைபெறும்படி செய்கிறார்கள் அசுரர்கள். முறை திறம்பிய செயல்களைச் செய்கிற வர்கள் யாரோ அவர்கள் எல்லாம் அசுரர்கள். கள்ளின் ஆற்றலால் களிப்பவர் தேறலைக் கரத்தில் கிள்ளை ஆணினுக் கூட்டியே காமநோய் கிளர்த்தி உள்ளம் ஓடிய சேவலும் இரங்கஓ திறத்துப் புள்ளின் மென்பெடை மீமிசை கலந்திடப் புணர்ப்பார். . (நகர் புகு.சே.) [களிப்பவர் மயங்கி அசுரர். தேறலை - கள்ளை. கிளர்த்தி - உண்டாகச் செய்து. சேவலும் - ஆண் அள்ளமும். ஓதிமம் - அன்னம்.] அன்னமும் கிளியும் மிக நல்ல பறவைகள். எந்தச் சூழலில் அவை வளருகின்றனவோ அதற்கு ஏற்றபடி அவற்றின் வாழ்வு இருக்கும். மண்டனமிச்ரர் வீடு எங்கே இருக்கிறது என்று சங்கரர் கேட்டார். "எந்த வீட்டு வாசலில் உள்ள கிளிகள் வேதத்தைச்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/339
Appearance