320 கந்தவேள் கதையமுதம் சொல்லிக்கொண்டிருக்குமோ அந்த வீடுதான் மண்டனமிச்ரர் வீடு" என்று சொன்னார்களாம். பெரும்பாணாற்றுப்படையில் அந்தணர் உறையும் ஊரைச் சொல்ல வரும் புலவர், "வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் மறைகாப் பாளர் உறைபதி" என்கிறார். அங்கே இளம்பிள்ளைகள் வேக அத்தியயனம் செய் கிறார்கள். அவர்கள் அத்தியயனம் செய்வதைக் கேட்டுக்கொண்டு அங்கே இருக்கிற கிளிகளும் வேதத்தை ஓதுகின்றனவாம். சத்சங்கத்தின் பயன் இது. பொல்லாத சங்கத்தில் சேர்ந்தால் மனத்திற்குப் பிடிக்காத, மாறுபாடான காரியங்களைச் செய்யும்படி நேரும். நம் நாட்டில் நல்லவர்களது இணக்கத்தை மிகச் சிறப்பாகச் சொல்வார்கள். இறைவனைக் காட்டிலும் அடியவர்கள் பெரியவர்கள் என்று சொல்வது வழக்கம். அதனால் திருத்தொண்டர் புராணத்தைப் பெரிய புராணம் என்றே சொன்னார்கள். துஷ்டர்களுடைய சகவாசத்தினால் பெண் அன்னத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையைக் கண்டு ஆண் அன்னம் வருந்தும் காட்சியை வீரவாகு தேவர் கண்டார். கோபமும், அருவருப்பும் அவருக்கு ஏற்பட்டன. இப்படி ஒவ்வோர் இடத்தையும் ஆராய்ந்து பார்த்து வந்த அவர் பானுகோபன் அரண்மனையைப் பார்த்தார். சூரன், தர்ம கோபன் ஆகியவர்களுடைய அரண்மனைகளையும் பார்த்தார். சயந்தன் சிறையில் இருத்தல் இந்திரன் மகனாகிய சயந்தன் வீரமகேந்திரபுரச் சிறையில் இருந்தான். அவனுடன் வேறு பல தேவர்களும் இருந்தார்கள். அவன் அங்கே இருந்ததைக் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். நாம் ஒன்றைச் சொன்னால் நேராக எடுத்துச் சொல்வோம். கவிஞர்கள் சற்று வளைத்துச் சொல்வார்கள். அப்படிச் சொல்லதில் ஓர் அழகு இருக்கிறது. சயந்தன் தேவர்களுடன், தங்குவதற்கரிய மிகவும் கடுமையான சிறையில் தங்கினான் என்பதைச் சொல்ல வருகிறார்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/340
Appearance