உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 . கந்தவேள் கதையமுதம் இப்படிப் பல்வேறான எண்ணத்தால் அவன் உள்ளம் கலங்கி யது. அதற்குப் பின்னர்த் தெளிவு பெற்றான். அறிவு உடையவன் ஆகையால் எல்லாம் விதியின்படி நடக்கும் என்று தெளிவு அடைந்தான். பிறப்புறு வைசுலைத் தொட்டுப் பின்னரே இறப்புறு நாள்வரை, யாவர்க்கு ஆயினும் உறப்படு துய்ப்புஎலாம், ஊழின் ஊற்றமால்: வெறுப்பதுஎன் அவுணரை ? வினையி னேன்எனும். (சயந்தன் புலம்புறு. 28. [பிறப்புறு லைக்லைத் தொட்டு - பிறந்த நாள் தொடங்கி, துய்ப்பு அதுபவம். ஊற்றம் - வலிமை.] பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் நமக்குக் கிடைக்கின்ற இன்ப துன்பம் ஆகியவை விதி வழியே வரும். அப்படி இருக்க, அசுரர்களை எதற்காக வெறுக்க வேண்டும்? என்னுடைய தீ வினையே எனக்கு இவ்வாறு முடிந்தது' என்று அவன் ஒருவாறு தெளிவு பெற்றான். நமக்கு வருகின்ற துன்பங்களும், இன்பங்களும் முன்னை ஊழ்வினையின் பயனாக வருகின்றன. புறநானூற்றில் ஒரு பாடல், யாதும் ஊரே யாவரும் கேளிர்' 41 32 என்று தொடங்குகிறது. அந்த அடி எல்லோருக்கும் தெரியும். அது வருகிற பாடலில்தான் ஊழ்வினை பற்றிய செய்தி வருகிறது. தீதும் நன்றும் பிறர்தர வIr ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என்று அந்தப் புலவர் சொல்கிறார். நமக்கு உண்டாகிற துன்பத் திற்கும் இன்பத்திற்கும் நாம் செய்த செயல்களே காரணம். நீரோட் டத்தில் ஓடம் எப்படி ஓடுமோ அப்படி உயிரானது விதி வழிப்படும் என்று அந்தப் பாட்டில் சொல்கிறார். அப்படி "நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது நிறவோர் காட்சியில் தெளிந்தனம்." ஆகையால் பெரியோர்களை வியந்து பாராட்ட மாட்டோம். ஒருகால் பாராட்டினாலும் சிறியவர்களை இகழவே மாட்டோம் என்று பாட்டு முடிகிறது.