உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் சயந்தன், "பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." பிறப்புறு வைகலைத் தொட்டுப் பின்னரே இறப்புறு நாள்வரை யாவர்க்கு ஆயினும் உறப்படு துய்ப்புஎலாம் ஊழின் ஊற்றமால் என்று சொன்னான். வினைகள் 325 நம்முடைய வினைகள் மூன்று வகைப்படும்; சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்பவை அவை. பிறவிகள்தோறும் நாம் பல செயல் களைச் செய்து வருகிறோம். அவற்றால் உண்டான புண்ணிய பாவத் தொகுதிக்குச் சஞ்சிதம் என்று பெயர். அதிலிருந்து இந்தப் பிறவியை எடுக்கும்போது ஒரு பகுதியை அநுபவித்தற்குக் கொண்டு வருகிறோம். அதற்குப் பிராரப்தம் என்று பெயர். பிராரப்த வினையை அனுபவித்துக் கழித்துவிட்டால் பிறகு அவனுக்குப் பிறவியே வராது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பழைய கடனைக் கொடுத்துவிட்டு, புதிய கடனை வாங்குவதுபோல, பிராரப்தமாகிய பழைய வினையால் இன்ப துன்ப அனுபவங்களைப் பெற்று, புதிய செயல்களைச் செய்கிறோம்; மறுபடியும் வினைகளை ஈட்டிக் கொள்கிறோம். அப்படி இந்தப் பிறவியில் ஈட்டும் வினைகளுக்கு ஆகாமியம் என்று பெயர். உண்டான ஞானிகளுக்குப் பிராரப்தம் ஒன்றுதான் உண்டு. அவர்கள் இந்த உடம்பு இருக்கும் வரைக்கும் பிராரப்தத்தை அநுபவித்துக் கழிப்பார்கள். 'என்னுடைய செயல் என்பது ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவனுடைய செயலே' என்று எண்ணி அவர்கள் செயல்படுவதனால் அவர்களுக்குப் புதிய வினை ஒன்றும் சேராது. ஆகவே அவர்களுக்கு ஆகாமியம் இல்லை. ஞானம் பெற்றால் சஞ்சிதம் போய்விடும். சஞ்சிதம் எவ்வாறு போகும் என்று கேட்கலாம். வினையை அனுபவிக்க உடம்பு வேண்டும். இந்தப் பிறவியில் ஞானம் பெற்று, இறைவன் திருவருளுக்கு ஆளானவர்களுக்கு இனிமேல் பிறவி இராது. ஆகவே அவர்களுக்குச் சஞ்சித வினைகளை அநுபவிக்கக் கருவிகள் இல்லாமல் போய்விடுகின்றன. இந்தப்