உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கந்தவேள் கதையமுதம் பிறவியில் செய்த வினைகள் இல்லை. ஆகையால் அவற்றின் தொடர் பும் இல்லை. இருப்பதை அநுபவித்துத் தீர்த்துவிடுவார்கள். எனவே வினையின் தொடர்பு இல்லாமல் வினைகள் அற்ற பற்றற்ற நிலையில் இருப்பார்கள். ஞானிகளுக்குப் பக்குவம் ஏற ஏற இருவினை ஒப்பு, மலபரி பாகம், சத்தி நிபாதம் ஏற்படும். புண்ணிய பாவங்கள் ஒத்துப் போவதே இருவினை ஒப்பு. பக்குவம் பெறுவது மலபரிபாகம். இறைவன் திருவருளைப் பெறுவது சத்திநிபாதம். 'எல்லாம் விதிப்படி நடக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும்? ஆகையால் நாம் செய்வன எல்லாம் விதியின் பயனாகச் செய்யப்படுவன' என்று சில போலி வேதாந்திகள் பேசுவார்கள். உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். விதியின் விளைவு முன் பிறவிகளில் செய்த செயலின் பயனாக வருவது ஊழ்வினை. அந்த ஊழ்வினையின் விளைவாகிய அநுபவம் இப்போது இன்ப துன்பங்களாக வருகின்றன. புண்ணிய பாவம் என்பது கர்மம் அல்லது ஊழ்வினை. அவற்றின் விளைவு இன்ப துன்பங்கள். நாம் இப்போது செய்கிற செயல்கள் வேறு; முன்னாலே செய்த செயல்களின் விளைவாகிய அநுபவம் வேறு. இரண்டும் ஒன்றாவதில்லை.நாம் இப்போது செய்கிற செயல்களுக்கு நம் அறிவு வழிகாட்டுகிறது. ஆனால் அநுபவிக்கின்ற அநுபவங்கள் எல்லாம் முன்னாலே வரையறுக்கப் பட்டவை. நாம் செய்கிற காரியங்களுக்கு மூன்று வகையில் அநுபவம் கிடைக்கும். உடனே சில பேருக்குக் கிடைக்கும். வயல்வழியே நடந்து போகும்போது முள்ளை மிதித்துவிடுகிறோம். அதனால் உடனே காலில் இரத்தம் வருகிறது. செய்த செயலுக்கு உடனே பலன் கிடைத்துவிடுகிறது. திருடன் ஒருவன் திருடுகிறான். பல காலம் கழித்து அவனைப் போலீசார் பிடித்துவிடுகிறார்கள். பின்பு விசாரனை நடந்து அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. ஒருவன் செய்த செயல் களுக்குச் சிறிது காலம் கழிந்தாலும் அந்தப் பிறவியிலேயே