உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 327 கிடைக்கிற பயன் இது. ஒருவன் பல குற்றங்களைச் செய்கிறான். அவற்றிற்கு இந்தப் பிறவியிலே தண்டனை கிடைப்பதில்லை. பின் பிறவிகளில் பயன் கிடைக்கிறது. அவற்றுக்கெல்லாம் இப்போது கிடைக்காமல் பின் பிறவிகளில் கிடைக்கிறதற்குக் காரணமான வினையை ஊழ்வினை என்று சொல்வார்கள். இப்போது அனுபவிக்கிற இன்ப துன்பங்கள் யாவுமே முன் பிறவிகளில் செய்த செயல்களின் விளைவு. விதி என்பது அந்தச் செயல்களுக்கு மூலமானது. இப்போது புதிதாகச் செய்கிற செயல்கள் வேறு. இந்த இரண்டையும் போட்டுக் குழப்பக் கூடாது. எல்லாம் அவன் செயல் ஒருவர் கூறுவார். இப்படிச் சொல்லும்போது வேறு "எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்களே ! அப்படி இருக்கும்போது நாம் செய்கிற செயல்கள் எல்லாம் எப்படி நம் முடைய செயல்களாகும்? புண்ணிய பாவம் என்பது எப்படி வரும்?" என்று கேட்பார்; அவனன்றி ஓரணுவும் அசையாது' என்ற பழமொழியை எடுத்துக் காட்டுவார். ஒரு பெரும் பணக்காரர் ஒரு கோவிலைக் கட்டினார். நிறையப் பணத்தை ஒரு சிற்பிக்குக் கொடுத்து அந்த கோவிலைக் கட்டச் சொன்னார். சிற்பி மிகச் சிறந்தவர் என்று நினைத்தார். ஆனால் அவன் கோபுரத்தின் ஒரு மூலையிலே ஒரு பொம்மையைச் சரியாகச் செய்யவில்லை. கோவில் கட்டி முடிந்து விட்டது. கோவிலைப் பார்த்த சிலர் அந்தச் செல்வரிடம், "என்ன ஐயா, அந்தப் பொம் மையை இப்படிச் செய்துவிட்டீர்களே !" என்று கேட்கிறார். பணம் கொடுத்துக் கட்டச் சொன்ன பணக்காரர்," அந்தப் படுபாவி இந்த மாதிரி பண்ணிவிட்டான் என்று சொல்கிறார். அந்தக் கோவிலை யார் கட்டினார்? பணக்காரர் கட்டினார் என்று சொல்லலாம்; சிற்பி கட்டினார் என்றும் சொல்லலாம். கோணலான பொம்மையைக் கட்டினதற்குக் காரணம் சிற்பிதான். பணம் கொடுத்துக் கட்டச் சொன்ன முதலாளியை ஏவுதல் கர்த்தா என்றும் கோவிலைக் கட்டிய சிற்பியை இயற்றுதல் கர்த்தா என்றும் சொல்