உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கந்தவேள் கதையமுதம் வார்கள். கோவிலை முதலாளி கட்டினார் என்பதற்கும், சிற்பி கட்டினார் என்பதற்கும் வேறுபாடு உண்டு. முதலாளி அந்தக் கோவிலைக் கட்டுவதற்குரிய பொருளைத் தந்தார். சிற்பி அதை வைத்துக்கொண்டு எல்லோரும் பாராட்டுவதற்குரிய நல்ல முறையில் கட்டலாம்; அல்லது வேறு விதமாகவும் கட்டலாம். மூலகாரணமாக இருந்தவர் செல்வர்; அதைத் தன் அறிவுக் கேற்பக் கட்டினவன் சிற்பி. அது போல் இந்த உலகத்தில் இறைவன் நமக்குத் தனுகரண புவன போகங்களை எல்லாம் தந்திருக்கிறான். அவற்றல் செயல்களை நாம் செய்கிறோம். கருவி கரணங்களை ஆண்டவன் நமக்குக் கொடுக் காவிட்டால் நம்மால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. இதை நினைந்தே, 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பார்கள். ஆண்டவன் ஏவுதல் கர்த்தாவாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் வேண்டிய மூலப் பொருளைப் படைத்திருக்கிறான். சிற்பியைப் போல அந்தக் கருவிகளை வைத்துக் கொண்டு நாம் வேலை செய்கிறோம். நமக்கு இறைவன் அறிவைக் கொடுத்திருக்கிறான். எது நல்லது, எது அல்லாதது என்று ஆராய்ந்து செய்வதற்குரி கருவியாக அது இருக்கிறது. நாமே நல்லது பொல்லாததை உணர்ந்து, பொல்லாததை விலக்கி நல்லதைச் செய்ய வேண்டும். முதலாளி பணம் கொடுத்தாலும், கோணலாகச் சிற்பி பொம்மையைப் பண்ணி வைத்தால் அந்தப் பழி சிற்பியினுடையது தானே தவிர முதலாளியினுடையது ஆகாது அதுபோல இறைவன் நமக்கு உடம்பைக் கொடுத்திருக்கிறான் ; மனத்தைக் கொடுத்திருக் கிறான். அவற்றைக் கொண்டு நல்வழியிலும் தீய வழியிலும் செயல் செய்வதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் செயல் செய்கிறோம். செயல்கள் நம்முடையவைகளே. ஆண்டவன் இந்த உடம்பு முதலிய வற்றைக் கொடுத்திருப்பதனாலும், வாழ்வதற்குரிய பிரபஞ்சத்தை அமைத்திருப்பதனாலும் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக இருக்கிறான். அதனால் எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறவர்கள் தாங்கள் செய் கிற தவற்றுக்குச் சமாதானமாக அதைச் சொல்கிறார்களே தவிர, எல்லாவற்றுக்கும் காரணம் ஆண்டவன் என்பதை உணர்ந்து கொள் வதில்லை. உண்மையிலேயே அதை உணர்ந்தவர்களுக்கோ தாமாகச்