உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 329 செய்கிற காரியம் எதுவும் இராது. அவர்களுக்குப் பசு கரணங்கள் வில்லாம் பதி கரணங்களாகிவிடும். அவர்கள் செய்கிற செயல்கள் எல்லாமே இறைவன் செயலாகிவிடும். அவர்கள், 'எல்லாம் இறை வன் செயல்' என்று எண்ணுகிறார்கள். நாமோ யாராவது நம்மைக் குறை கூறுவதற்குரிய காரியத்தைச் செய்கிற போது மட்டும், 'அவன் செயல்' என்கிறோம். ஆகவே உயர்ந்த ஞானம் உடையவர்கள் எல்லாம் அவன் செயல் என்பதற்கும், நம் போன்றவர்கள் சொல் வதற்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று பாவங்களைச் செய்யக் கூடாது. விதியினால் உண்டாகும் அநுபவத் திற்கும் இப்போது செய்யும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். சயந்தன் வருந்துதல் பல பல சயந்தன் தன் வினையை நொந்து கொண்டான். வகையான எண்ணங்களை எண்ணினான். 'தர்ம தேவதை போய் விட்டதோ? பொல்லாதவர்கள் பிறவி சிறந்துவிட்டதோ? மாதவப் பயன் தேய்ந்து போய்விட்டதோ ? நல்ல அம்சம் என்பது இல்லாது ஆகிவிட்டதோ? கலி புருடன் ஆட்சி வந்துவிட்டதோ? வேதம் செத்துவிட்டதோ? சிவபெருமானே இல்லையோ ?' என்றெல்லாம் எண்ணி ஏங்கினான். துறந்ததோ பேரறம்? தொலையும் தீம்பவம் சிறந்ததோ? மாதவப் பயனும் தேய்ந்ததோ? குறைந்ததோ நன்னெறி? கூடிற் றோகலி ? இறந்ததோ மறை? சிவன் இல்லையோ ? எனும். (சயந்தன் புலம்புறு.88.) [தீம்ாவம்-கெட்ட பிறவி; பவம் - பாவம் என்பதுமாம்.] F அவன் அப்போது தான் இழந்தவற்றை எண்ணிப் பார்த்தான். என் தகப்பனார் அமராவதிப் பட்டணத்தை ஆட்சி புரிந்துகொண்டி ருந்தபோது நான் எத்தனை வைகயான இன்பங்களை அநுப் வித்தேன்!' என்று எண்ணிப் பார்க்கவில்லை. அப்போது நான் செய்துகொண்டிருந்த நல்ல கடமைகளை எல்லாம் இப்போது செய்ய முடியாமல் இருக்கிறதே !' என்று எண்ணினான். 'நான் வேத பாராயணம் செய்யாமல் இருக்கிறேனே ! சந்தியா காலங்களில் 42