.330 கந்தவேள் கதையமுதம் அக்கினி காரியம் பண்ண வேண்டுமே; அதைப் பண்ணாமல் இருக் கிறேனே! தந்தையை வணங்குவதற்குரிய சந்தர்ப்பம் இப்போது இல்லையே!" என்று அவன் வருந்தினான். அந்தியின் மறைமொழி அயர்த்து வைகினன்; சந்தியில் வினைகளும் தழலும் ஓம்பலன்; எத்தையை வழிபடும் இயல்பும் நீங்கினேன்; முந்தையின் உணர்ச்சியும் முடிந்து ளேன்எனும். (அந்தியின் - சந்தி வேளைகளில், சந்தியா வந்தனம். உணர்ச்சி - அறிவு.] இறைவனிடத்தில் (சயந்தன் புலம்புறு. 35.} அயர்த்து - மறந்து. சந்தியில் விகைள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல பழக்கங்கள் இருக்கும். அந்தப் பழக்கங்கள் நன்கு அவர்களிடத்தில் உறைத்திருக்கும். அவற்றை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் அவர்களால் முடியாது. அவர்கள் மறந்துபோனாலும் எப்படியாவது அந்த உணர்ச்சி வந்துவிடும். "நற்றவாஉனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே" என்று சுத்தாமூர்த்தி நாயனார் சொல்கிறார். ஒருவர் இறைவன் கோவிலுக்குச் சென்று நாள்தோறும் வழிபடுகிறார். அந்த நேரத்தில் அங்கே போகாவிட்டால் அவரது மனத்திலே ஒரு குறை ஏற்படும். மூக்குப் பொடி போடுவானுக்கு, பொடி போடாமல் இருந்தால் எப்படி ஒரு வகையான ஏக்கம் உண்டாகுமோ, அதுபோல் இறைவனிடத்தில் ஈடுபட்டு, அவனை நாள்தோறும் தரிசிக்கும் வழக்கம் உள்ளவனுக்கு, ஒருநாள் இறைவன் கோவிலுக்குப் போகவில்லையென்றாலும் மனச் சோர்வு உண்டாகும். - சீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருந்தாள். அப்போது அவள் எண்ணம் பலவாக இருந்தது. இராமனோடு இருந்திருந்தால் எப்படி இன்பம் அனுபவித்திருப்பேன் என்று எண்ணவில்லை. 'என் னுடைய நாயகனுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுத்து நான் அருந்தச் செய்வேனே; இப்போது அந்தப் பாக்கியம் இல்லையே! விருந்தினர்கள் வரும்போது அவர்களை உபசரிப்பதற்கு நான் இல்லையே என்று அவர் எத்துனை வருந்துவாரோ ?' என்றெல்லாம் நினைந்து வருந்துகிறாள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/350
Appearance