உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் "" அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்; விருந்து வந்தபோது என்னுறு மோஎன்று விம்மும் 331 என்று இந்திய நாட்டுக்கே பிரதிநிதியாகிய பெருமாட்டி பெண்களின் தர்மத்தை எண்ணிப் பார்க்கிறாள். அதே வகையில் சயந்தன் தான் பெறாமல் போன போகங்களை கினைந்து வருந்தாமல் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய முடியவில்லையே என்று வருந்தினான். நாள்தோறும் மாலை நேரத்தில் பத்து மைலுக்கு அப்பாலுள்ள சிவன் கோவிலுக்குத் தம்முடைய காரில் சென்று சிவபெருமானை வழிபட்டு வருவார் ஒருவர். ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருக் கும் போது கார் பழுதுபட்டு விட்டது. கார் பழுதுபட்டுவிட்டதே என்று வருந்தாமல், "ஐயோ ! இன்றைக்கு இறைவனுடைய தரிசனம் கிடைக்காமல் போய்விட்டதே!" என்று வருந்துவார். அதுபோன்ற நிலையில் சயந்தன் வருந்தினான். நான் அவன் மறுபடியும் சமாதானம் செய்து கொண்டான். என்ன செய்வது? பழைய காலத்தில் நாம் செய்த வினையின் பயனாகச் சிவபெருமானே எங்களுக்கு இத்தகைய துன்பங்களை வரும்படி செய்திருக்கிறான்' என்று ஊழ்வினையை நினைத்தான். இறைவன் தனக்கு எத்தகைய அருள் செய்தாலும், அவனவன் அவனவனது ஊழ்வினைப் படியேதான் அவற்றை அநுபவிக்க முடியும் என்று சயந்தன் தெரிந்துகொண்டிருந்தான். இங்கே எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நாள் பரமசிவனும் அம்மையும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப் போது அம்பிகை பரமசிவனைப் பார்த்து, "உலகத்தில் எத்தனையோ பேர் துன்பப்படுகிறார்களே; எல்லோரும் நம் குழந்தைகள் அல்லவா? எதற்காகப் பலபேரைத் துன்பம் அடையும்படியாகவும், சில பேரை இன்பம் அடையும்படியாகவும் வைத்திருக்கிறீர்கள்? எல்லோருக்குமே அருள் செய்வதுதானே?" என்று கேட்டாள். அப்போது சிவபெருமான் சொன்னார் ; "நாமா செய்கிறோம்? அவர வர்கள் செய்த வினைப்படிதான் அவரவர்கள் இன்ப துன்பங்களை அநுபவிக்கிறார்கள். வினையின் வழியே இன்ப துன்பத்தை அறுப விக்க வேண்டுமென்று நாம் விதித்து விட்ட பிறகு, நாமாக அவர்