332 கந்தவேள் கதையமுதம் களுக்கு அருள் செய்தாலும் அவர்களது வினை அதை அநுபவிக்க அவர்களை விடாதே" என்றார்; "எப்படி என்பதை நீயே சோதித்துப் பாரேன் " என்றார். அம்பிகையின் கருணை ஒரு பிச்சைக்காரன் மீது விழுந்தது. அந்தப் பிச்சைக்காரன் காளைப் பருவத்தினன். ஒரு குருட்டுப் பிச்சைக்காரனும் அவனுடன் இருந்தான், ஒரு நாள் இந்தப் பிச் சைக்காரன் தனியே போகும் போது இவனுக்கு அந்தக் குருட்டுப் பிச்சைக்காரனின் நினைவு வந்தது. 'அந்தக் குருட்டுப் பிச்சைக் காரன் ஆள் இல்லாத இடத்தில் எல்லாம் கை நீட்டுகிறானே ! நமக்குக் கண் இல்லையென்றால் எப்படிப் பிழைப்பது?' என்று நினைந்தவன், 'கண் இல்லையென்றால் எப்படி நடப்பது? என்று நினைந்து, கண்ணை மூடிக்கொண்டு சில கஜ தூரம் நடந்தான். பிறகு கண்ணைத் திறந்துகொண்டு, 'ஓ எப்படியும் நாம் பிழைத்துக்கொள்ள லாம்' என்று மகிழ்ந்தான். அவன் போகிற பாதையில் அம்பிகை ஆயிரம் ரூபாய் அடங்கிய பையைப் போட்டிருந்தாள். அவன் அந்த இடத்தில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்தான். அந்தப் பணி முடிச்சு அவன் கண்ணில் படவில்லை. அவனுக்குப் பயன்படவில்லை. அவனுடைய ஊழ்வினை அதை அநுபவிப்பதைத் தடுத்துவிட்டது. அந்தச் சமயத்தில் அவன் குருடனாகிவிட்டான். ஆகவே, நாம் நம்முடைய வினைப்பயனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று நினைந்து தெளிவு பெற்றான் சயந்தன். அவனைச் சிறை காவலர்கள் துன்புறுத்தினார்கள். "இந்திரனும், இந்தி ராணியும் எங்கே இருக்கிறார்கள்? சொல்லாவிட்டால் உங்கள் உயிரைப் போக்கிவிடுவோம்" என்று சயந்தனையும், தேவர்களையும் வருத்தினார்கள். மன்னாம் நம்கோன் தன்பணி நில்லா மகவேந்தும் மின்னான் தானும் யாண்டுறு கின்றார் ? விரைவாசுச் சொன்னால் உய்வீர்; அல்லதுஉம் ஆவி தொலைவிப்பேம்: முன்னா வேபோல் எண்ணலிர் ; உண்மை மொழிகென்றார். (சயந்தன் புலம்புறு.44.) பணி நில்லா - ஏவலில் ஒட்டி நில்லாத, [நம் கோனென்றது சூரபன்மனை. மகவேந்து-இந்திரன். மின்னான் - இந்திராணி.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/352
Appearance