336 சயந்தன் புலம்பல் கந்தவேள் கதையமுதம் சயந்தன் இதை உணர்ந்துகொண்டு சொன்னான்; "இது வரைக்கும் இந்திர போக வாழ்க்கை சிறந்தது என்று இருந்தேன். கற்பக நிழலின்கீழ் வாழ்கின்ற வாழ்க்கை பயனற்றது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். உயர்ந்த பதவி, உயர்ந்த நிலை என்பன எல்லாமே நிலையற்றவை. மிக உயர்ந்த பதவியில் இருக் கிறவர்கள் அந்தப் பதவியை இழந்து துன்புறுவதைப் பார்க்கிறோம். உண்மையாக நிலைத்திருப்பது உன்னுடைய தொண்டு ஒன்றுதான்; உன் திருவடி ஒன்றுதான் இன்பம் " என்று சொல்லித் துதித்தான். தண்தேன் நுளிக்கும் தருநிழற்கீழ் வாழ்க்கைவெஃகிக் கொண்டேன் பெருந்துயரம்; வான்பதமும் கோதுஎன்றே கண்டேன்; பிறர்தம் பதத்தொலைவும் கண்டவனால்; தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவனே. (சயந்தன் புலம்புறு. 718.) [தருநிழல்கீழ் - கற்பக நிழவின்க்ர். வெஃகி் - விரும்பி. வான் பதமும் தேவலோக மகனியும். பதத்தொலைவும் - பதவிகளின் அழிவையும். தொண்டேன். தொண்டைச் செய்யும் நாள்: தொண்டனேன் என்பதே இங்கே சாரியை இன்றித் தொண்டேன் என வந்தது.] இவ்வாறு பல வகையாக வருத்தப்பட்டுச் சயந்தன் அவசமாக வீழ்ந்துவிட்டான். சயந்தன் கண்ட கனவு சிறைக்குள்ளே சயந்தனும், தேவர்களும் துன்பப்படுவதை முருகப் பெருமான் தெரிந்துகொண்டான். எல்லா உயிர்களினிடையும் இருக்கிறவன் அவன். ஆகையால் அவனுக்கு இது தெரிந்தது. விண்ணு ளார்களும் சயந்தனும் வியன்ம கேந்திரத்தின் உண்நி லாம்பெருந் துயருடன் மாழ்கியது உணர்ந்தான், எண்ணி லாஉயிர் தோறும்உற்று இன்னருள் புரியும் அண்ணலார்கும ரேசனாம் அறுமுகத் தமலன். சயந்தன் களவு. 1. ) [மாழ்கியது - வருந்தியதை. அண்ணலார் குமரேசன் - சிவபெருமானுடைய திரு மகளுகிய தெய்வம் அண்ணல் ஆர்-பெருமையை உடைய என்றும் கொள்ளலாம்.] 7 சயந்தன் அப்போது ஒரு கனவு கண்டான். தேவர்களுக்கு உண்டான துன்பங்களை நீக்க, சின்னஞ்சிறு குழந்தையாகத் திருச் செந்தூரில் எழுந்தருளியிருக்கும் முருகன், அவசம் கொண்டு கீழே
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/356
Appearance