உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 337 விழுந்து விட்ட சயந்தன் கனவில் தோன்றினான். கனவிலேயே சயந் தன் முருகப்பெருமானுடன் பேசலானான். SE தொண்டனேன் படும் துன்பத்தைப் போக்குவதற்காக மிக்க அருள் கொண்டு தேவரீர் எழுந்தருளியிருக்கிறீர்கள். தங்களைப் பார்த்தால் திருமாலாகவும் தோன்றவில்லை. பிரமனாகவும் தோன்ற வில்லை. சிவபெருமானாகவும் தோன்றவில்லை. தேவரீர் யார் என்று தெரிவித்தருளவேண்டும்" என்று வேண்டினான். தொண்ட னேன்படும் இடுக்கணை நாடியே தொலைப்பாண் கொண்ட பேரருள் நீர்மையிற் போந்தனை ; குறிக்கின் விண்டும் அல்லை ;அப் பிரமனும் அல்லை ; மேல் ஆகும் அண்டர் நாதனும் அல்லைநீ ; ஏவர்மற்று ? அருளே. (சயந்தன் களவு- 6.) [ இடுக்கணை - துன்பத்தை. தொலைப்பான் -நீக்க. எண்டு - விஷ்ணு. அண்டர் நாதன் சிவபெருமான்.] . முருகன் அந்தக் கனவிலேயே அவனுக்குப் பதில் சொன்னான்; " உன்னுடைய தந்தையின் துன்பம், உன்னுடைய துன்பம் ஆகிய லுற்றை எல்லாம் தேவர்கள் நம்பால் வந்து சொல்ல, நாம் எல்லையில் லப் படைகளுடன் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். தாரகனை யும், கிரௌஞ்ச மலையையும் சங்காரம் செய்தாகிவிட்டது. இந்திரன், பிரமன் முதலியவர்கள் எல்லாம் இப்போது நம்முடன்தான் இருக் கிறார்கள். உன்னுடைய தாய் மேருவில் இருக்கிறாள். நாளைக் கே திருச்செந்தூரை விட்டு வந்து, இந்த வீர மகேந்திரபுரத்தில் தங்கிப் போர் செய்யத் தொடங்குவோம், பத்து நாளில் தேவர்களை யும், உன்னையும் விடுதலை செய்வோம். சூரசங்காரம் செய்வோம்" என்று அருளினான். 1 நுந்தை தன்குறை துல்குறை யாவையும் துவன்று வந்து தந்தமை வேண்டலும் வரம்பில்சே னையொடும் இந்த ஞாலத்தின் எய்தியே கிரவுஞ்சம் என்னும் அந்த வெற்பையும் தாரகன் தன்னையும் அட்டாம். செல்லும் இப்பகல் கழித்தபின் நாளையே செந்தி மல்ல லம்பதி நீங்கிஇந் நகர்க்குஆயல் வைசிச் சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தம் தொகையும் அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும். (சயந்தன் கனவு. 6, 11.) [நுதை கன்குறை - உன் தந்தையிலுடைய காரியம். அட்டாம் - அழித்தோம். இப்பகல்- இந்த நான். மல்லல் அம்பதி - வளத்தையுடைய அழகிய நகரம். ஐந்து இரு வைகலின் -பத்து நாளில், அடுதும்-அழிப்போம்.] 43