உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 340 என்னலும் அமர ரோடும் இந்திரன் குமரன் கேளாச் சென்னியின் அமிர்துள் ளுறல் கந்தவேள் கதையமுதம் செய்தவத்து அயின்ற மேலோர் அள்ளதற் பின்னர் நேமி அமிர்தமும் பெற்றுஉண் டாங்கு முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடிவிலா மகிழ்ச்சி வைத்தான். (வீரவாகு தேவர் சயந்தனை. 12) [சென்னியின் அமிர்து உள்ளுறல் - தலையிலுள்ள சந்திரமண்டலத்தில் உள்ளே ஊறும் அமுதத்தை. நேரி அமிர்தமும் - பாற்கடலிற் பிறந்த அமுதத்தையும்.] முருகப் பெருமான் கனவில் அது பற்றி அருள் செய்யக்கேட்டது யோகிகள் அமுதபானம் பண்ணினது போல இருந்ததாம். வீரவாகு தேவரது சொற்களைக் கேட்டது பாற்கடலில் உண்டான அமுதத்தையும் உண்டாற்போல இருந்ததாம். நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் இருக்கின்றன. மூலாதாரத் திற்கு மேலே அக்கிளி இருக்கிறது. யோகம் செய்பவர்கள் அந்த அக்கினியை எழுப்புவார்கள். அதற்கு மேல் சுருண்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி இருக்கிறது. அந்த அக்கினி எழக் குண்டலினி சுருண்டது நீண்டு முன் போகும். மெல்ல மெல்ல ஒவ் வோர் ஆதாரமாகத் தாண்டி ஆறு ஆதாரங்களுக்கும் மேலே உள்ள சந்திர மண்டலத்தை அந்த அக்கினி தாக்கச் செய்தால் அப்போது அங்கிருந்து அமுதம் உண்டாகும். அதை உண்டவருக்கு நரை, திரை, மூப்புப் போகும் என்று யோகிகள் சொல்வார்கள். அப்படி யோகத்தினால் உள்ளே உள்ள அமுதத்தை உண்டவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தையும் உண்டாற்போலச் சயந்தனுக்கு உண்டான மகிழ்ச்சி இருந்தது என்று உபமானம் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். வீரவாகு தேவர் அவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். "எல்லோருக்கும் பிறவியை விதிக்கின்ற பிரமனையே சிறை செய் தவன் முருகப்பெருமான். எல்லா உயிர்களையும் தானே நான் முகனைப்போல இருந்து படைத்த பரஞ்சுடர், உங்களை எல்லாம் சிறையிலிருந்து நீக்குவதற்காக இங்கே வருகிறான். அதற்குக் காரணம் நீங்கள் செய்த தவமே. உங்களைப் போல வேறு யார்