உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 341 தவம் செய்திருக்க முடியும் ? முருகப் பெருமானே உங்களை விடுவிக்க வருகிறான் என்றால் இது பலகாலம் செய்த தவத்தின் பயனே அன்றி, எளிதில் கிடைக்கின்ற பேறு ஆகாது" என்று அவர்களைப் பாராட்டினார் வீரவாகு தேவர். சீர்செய்த கமலத் தோனைச் சிறைசெய்து விசும்பி னோடும் பார்செய்த உயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை எல்லாம் சூர்செய்த சிறையின் நீக்கத் தொடர்ந்துஇவண் உற்றான் என்றல் நீர்செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிய காலம்? [கமலத்தோனை - பிரமனை. உயிர்கள் படைத்த, சூர் - சூரபன்மன்.] - (வீரவாகு சயந்தனை.17.) செய்த உயிர்களுக்குரியவற்றைப் நல்லவர்கள் பொல்லாதவர்கள் இருக்கிற இடத்திற்கு வரமாட் டார்கள். கணக்கில்லாப் பாவங்களைச் செய்தவர்கள் அசுரர்கள். இங்கே நன்மை என்பது மருந்துக்குக் கூடக் கிடையாது. ஞானிகள் இந்த இடத்திற்கு வரமாட்டார்கள். ஆனால் எம்பெருமான் அருளினால் நான் இங்கே வந்தேன். சாக்கடையில் புகுவது போல வந்தேன். நான் மிகவும் வருந்திக்கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்ததனால் மகிழ்ச்சி அடைந்தேன்" என்று வீரவாகு தேவர் சொன்னார். சங்கையில் பவங்கள் ஆற்றும் தானவர் செறிந்த முதூர் இங்கிதில் அறிஞர் செல்லார் ; எம்பிரான் அருளி னால்யான் அங்கணம் படர்வோர் என்ன அகம்மெலிந் துற்றேன்; ஈண்டே உங்களை எதிர்த லாலே உலப்பிலா உவகை பூத்தேன். (வீரவாகு சயந்தனை.18.) [சங்கை இல் பவங்கள் கணக்கில்லாத பாவங்களை. தானவர் " அசுரர். அங்கணம் - சாக்கடை. அகம் மெலிந்து மனம் வருந்தி. எதிர்தலாலே - சந்தித்த தாலே. உலப்பு இலா - அழிவில்லாத.] -