வீரவாகுவின் வீரச் செயல்கள் 343 வெளிப்பட்டது இந்த அவதாரம். அசுரர்களை அழித்துத் தேவர் களுக்கு நலம் பாலிக்கச் சிவபெருமானிடத்தில் மறைந்திருந்த ஒருவன் எழுந்தருளியிருக்கிறான். அவன் புதியவனாக வந்தவன் அல்ல. இந்தத் தத்துவத்தை வீரவாகுதேவர் எடுத்துச் சொன்னார். தேவர்கள் படுகிற துன்பத்திற்குக் காரணம் இன்னது என்ப தையும் எடுத்துச் சொன்னார் வீரவாகு தேவர் தக்கன் வேள்ளி செய்தபோது நியாயமான முறையில் அவிர்ப்பாகம் கொடுக்கவில்லை. அவற்றைத் தேவர்கள் நுகர்ந்தார்கள். வீரபத்திர தேவர் போய் அப்போது அதற்கேற்ற தண்டனையைக் கொடுத்தார். என்றாலும் பாவத்தில் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. அதனால் வந்த இந்தத் துன்பம் இப்போது ஆறுமுகப்பெருமான் திருவருளால் நீங்கப் போகிறது. அவனையன்றி இந்தத் துன்பத்தை உங்களிடத்திலிருந்து நீக்குவதற்கு யார் இருக்கிறார்கள் ?"" சிறுவிதி வேள்வி நண்ணித் தீயவி நுகர்ந்த பாலம் முறைதனில் வீரன் செற்றும் முற்றவும் முடிந்த தில்லை; குறைசில இருந்த ஆற்றல் கூடியது உமக்கு இத் துன்பம்; அறுமுகப் பெருமான் அன்றி ஆர்இது நீக்கற் பாலார்? [ வீரவாகு சயந்தனை.25.) (சிறுவிதி - கக்கன். தீ அவி - முறையல்லாத கெட்ட அவியை, முறைதனில் - தண்டமுறைப்படி. வீரன் - வீரபத்திரன். செற்றும் - தண்டித்தும்.) LC "முருகப் பெருமான் ஆறு முகங்களை உடையவன். அந்த முகங்கள் தாமரை போல இருக்கின்றன. அவன் தன் கையிலுள்ள வேலினால் கிரவுஞ்சத்தையும், தாரகனையும் அழித்தான். இப்போது சூரபன்மாவை அழிக்க வந்திருக்கிறான். தேர் ஓட்டத்திற்கு முன்னாலே வெள்ளோட்டம் விடுவதுபோலச் சூரனைச் சங்காரம் செய்வதற்கு முன்னாலே கிரவுஞ்சத்தையும், தாரகனையும் அழித்தான். அப்போதே சூரனைச் சங்காரம் செய்வதற்கு முகூர்த்தம் வைத்தாகிவிட்டது."
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/363
Appearance