உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கந்தவேள் கதையமுதம் தாட்கொண்ட கமலம் அன்ன சண்முகத்து எந்தை வேலால் காட்கொண்ட கிரியி னோடு தாரகற் கடந்த பூசல் தோட்கொண்ட மதுகை சான்ற சூர்முதல் களைய முன்னம் நாட்கொண்ட தன்மைத் தன்னே, நறைகொண்ட அலங்கல் தோளாய். (வீரவாகு சயந்தனை.98.) கிரி (தாள்-காம்பு. காட்கொண்ட காழ்கொண்ட ; பகையைக் கொண்ட கிரவுஞ்சமலை பூசல் - போர். மதுகை வலிமை, சூர் முதல் - சூரனாகிய தலைவனை நாட்கொண்ட -முகூர்த்தம் வைத்த. நறைகொண்ட அலங்கல் - தேனைக் கொண்ட மாலை.] து "சூரபன்மாவைக் கந்தகிரியிலிருந்தே முருகன் மாய்த்திருக்கலாம். ஆனால் அறத்தை நினைந்து என்னைத் தூதுவனாக விடுத்திருக்கிறான். எம்பெருமான். சூரபன்மனைச் சங்காரம் செய்யாமல் உங்களை எல்லாம் சிறையிலிருந்து மீட்க முடியாது. சூரன் உங்களைச் சிறைவிடுக்க வில்லை யென்றால் போர் தொடங்க இருக்கிறான். இது அவன் திருவிளையாடல், ” சுறமறி அளக்கர் வைகும் சூரபன் மாவின் மார்பில் எறிசுடர் எஃகம் வீசி இருபிள வாக்கின் அல்லால் சிறையுளிர் மீள்கி லாமை தேற்றியும் பொருநர் செய்யும் அறநெறி தூக்கி ஒற்ற அடியனை விடுத்தான் ஐயன். நீண்டவள் தனக்கும் எட்டா தெடியதோர் குமரன் செவ்வேல் ஆண்டிருந் தேயும் உய்த்தே அவுணர்யா வரையும் கொல்லும்; பாண்டில்அம் தேர்மேற் கொண்டு படைபுறம் காத்துச் சூழ ஈண்டுவந்து அடுதல் அன்னாற்கு இதுவும்ஓர் ஆடல் அன்றே. (வீரவாகு சயந்தளைத். 29,31.) (கற மறி அளக்கர் - சுறாமீன்கள் துள்ளும் கடலின் நடுவில், எஃகம் - வேலை. தேற்றியும் - தெளிந்தும். பொருகர்-போர் செய்வோர். தூக்கி - எண்ணி. ஒற்ற தூதுவனாக. நீண்டவன் - திருமால். படை - சேனை.) உய்த்தே-செலுத்தி. பாண்டில் - சக்கரம்.