உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 347 இதுவரைக்கும் வீரவாகு தேவர் நகரத்தைப் பார்ப்பதற்குச் சூட்சுமமான வடிவத்தில் சென்றார். இப்போது சூரபன்மாவின் ஆஸ்தான மண்டபத்திற்குள் புகுந்தார். அங்கே புகுந்தவுடன் தம் முடைய பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டார்; அவையில் உள்ளவர்கள் எல்லாம் காணும்படியாக இயல்பான வடிவத்தை எடுத்துக் கொண்டார். இருந்தவர் இப்போது வடிவத்தை எடுத்துக் இதுவரைக்கும் நுட்பமான வடிவில் மட்டும் ஏன் தம்முடைய இயல்பான கொண்டார் என்று கேட்கலாம். அவர் சூரபன்மனுக்குப் பயப்பட் டவர் அல்ல. இயல்பான வடிவுடன் வந்தால் அங்கங்கே உள்ளவர் களுடன் சண்டையிட நேரும், அதனால் காலதாமதம் ஆகுமே என்று நினைந்து சூட்சும வடிவத்தை எடுத்துக் கொண்டு உலாவினார். சூரனிடத்துத் தூது வந்தவர் அல்லவா? சூரனைப் பார்க்கப் போகிற நிலையில் தம் இயல்பான வடிவத்தை மேற்கொண்டார். இதைக் கச்சியப்ப சிவாசாரியார் கூறுகிறார்.இங்கே, 'மாற்றலரால் வெல்ல ருந்திறல் வீரவாகு' என்கிறார். பகைவர்களால் வெல்வதற்கு முடி யாத ஆற்றல் உள்ளவர் வீரவாகு தேவர். 'நாம் பெரிய அசுரனாகிய சூரபன்மனுக்கு முன்னால் நம் இயல்பான உருவத்தோடு நின்றால் அவன் நம்மை என்ன செய்துவிடுவானோ?" என்று அவர் சிறிதும் அஞ்சவில்லை. சூரனைப் பற்றிய பய உணர்ச்சியே! அவருக்கு ஏற்பட வில்லை. அதனால் எல்லோரும் காணும்படியாகவே தம் இயல்பான வடிவத்தை எடுத்துக்கொண்டார். எல்லை இல்லதோர் பெருந்திரு நிகழவீற் றிருந்த மல்லல் அங்கழல் இறைவனைக் குறுகிமாற் றலரால் வெல்ல ருந்திறல் வீரவா குப்பெயர் விடலை தொல்லை நல்லுருக் காட்டினன் அவைக்கெலாம் தோன்ற. (அவை புகு.48.) [பெருந்திரு நிகழ - பெரிய ஐகவரிய பதவி நடக்க, மல்வல் - வளம், இறைவனை- சூரபண்மனை. விடலை -காளை. தொல்லை - பழைய இயல்பான.] சூரபன்மன் சிங்காதனத்தின்மேல் இருந்தான். வீரவாகு தேவர் அவைக்களத்தில் போய் நின்றார். அப்போது ஒரு யோசனை தோன்றியது. நான் சூரனுக்கு முன் நிற்கலாமா? நான் சண்முக நாதனின் தூதுவன் அல்லவா? இவன் காலடியிலே நான் நின்றால்