348 கந்தவேள் கதையமுதம் என்னை அனுப்பிய தலைவனுக்கல்லவா இழிவு? மேருவை வில்லாக வளைத்த எம்பெருமானுடைய குமாரனாகிய, வெற்றியை உடைய வேலுடைய சண்முகநாதனின் தூதுவன் நான் என்று சூரபன்மா வுக்கு எதிரிலே கீழே நின்று கொண்டு சொல்வது முருகனுக்கே இழிவு அல்லவா?' என்று எண்ணினார். ஒற்றை மேருவில் உடையதோர் பரம்பொருள் உதவும் கொற்ற வேலுடைப் புங்கவன் தூதெனக் கூறி இற்றை இப்பகல் ஆவுணர்கோன் கீழியான் எளிவாய் நிற்றல் எம்பிரான் பெருமையின் இழிபென நினைத்தான். (அவை புகு. 48.} (பரம்பொருள் - சிவபெருமான். புங்கவன் - தெய்வம். எளிவாய் - தாழ்வாக ] இப்படி எண்ணிக் கொண்டு முருகப் பெருமானைத் தியானம் பண்ணினார். அப்போது முருகப் பெருமான் அவருடைய உள்ளத் தைப் புரிந்து கொண்டான். தன் தொண்டர்களுக்கு எது வேண்டுமோ அதை நன்கு அறிந்து, அதன்படி உதவுகிறவன் எம் பெருமான்; தன் குழந்தை எதைக் கேட்டாலும் கொடுக்கிற தாய் போல அடியார்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருகிறவன்.வீர வாகு தேவர் நினைத்தவுடனே, ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்து ஒளிர்ந்தாற் போலக் கனக மாமணித் தவிசு ஒன்றை வான் வழியாக அனுப்பினான். தங்கம், இரத்தினம் சேர்ந்து அமைத்த பெரிய சிங்காதனம் அது. இனைய துன்னியே அறுமுகப் பண்ணவன் இருதாள் நிலையும் எல்லையில், ஆங்கவன் அருளினால் நிசியில் திகை ரத்தொகை ஆயிர கோடிசேர்ந் தென்னக் கனக மாமணித் தனிசொன்று போந்தது சுடிதின். (அவை புகு. 51) [பண்ணவன் - கடவுள். எல்லையில்-சமயத்தில் இசியில் - இரவில் தினகரத் தொகை - சூரியர் கூட்டம். தவிசு - நிங்காசனம்.] தன் தூதுவன் எளியனாக இருக்கக் கூடாதென்று முருகன் நினைந்து அனுப்பினான், இங்கே கச்சியப்பர் ஓர் உவமை சொல்கிறார். ஞானசம்பந்தப் பெருமான் முருகப் பெருமானுடைய அம்சம்; சிவபெருமானுடைய பிள்ளையார். அதனால் ஆளுடைய பிள்ளையார் என்று சொல்வது வழக்கம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/368
Appearance