உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 349 பட்டீசுவரத்திற்கு ஞானசம்பந்தப் பெருமான் தல யாத்திரை யாகச் சென்றபோது அவருக்கு வெயில் உறைக்காமல் இருப்பதற்காக முத்துச் சிவிகையையும், முத்துப் பந்தரையும் சிவபெருமான் அனுப் பினான். சிவபெருமான் ஆளுடைய பிள்ளையாரிடம் பரிவு வைத்து முத்துப் பந்தரையும், முத்துச் சிவிகையையும் அனுப்பியதைப் போல இங்கே வீரவாகு தேவருக்கு முருகப் பெருமான் கனக மாமணித் தவிக ஒன்றை அனுப்பி வைத்தாள் என்று ஆசிரியர் சொல்கிறார். நித்தி லப்படு பந்தரும் சிவிகையும் நெறியே மூத்த மிழ்க்கொரு தலைவனாம் மதலைக்கு முதல்வன் உய்த்த வாறுஎனக் குமரவேள் வீரனுக்கு உதவ அத்த லைப்பட வத்தது மடங்கலேற்று அணையே. (அவை புகு. 52.} (நித்திலப் படுபந்தர் - முத்துப் பந்தல். சிவிகை - பல்லக்கு. மதலைக்கு - ஞான சம்பந்தருக்கு. முதல்வன் - சிவரிறான். உய்த்தவாறு என - அனுப்பியதுபோல. அத்தலைப்பட - அவ்விடத்திலே தோன்றும்படி. மடங்கலேற்று அணைசிங்காதனம். வீரலுக்கு - வீரவாருவுக்கு.] இங்கே ஞானசம்பந்தப் பெருமானை 'முத்தமிழ்க்கொரு தலைவனாம் மதலை' என்று சொல்கிறார். தமிழ் கற்கிறவர்கள் மூன்று தமிழையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஞானசம்பந்தப் பெருமானுடைய பதிகங்களை நன்கு படிக்கவேண்டும். அவர் மூன்று தமிழுக்கும் தலைவர். வீரவாகு தேவர் சூரபன்மாவின் முன்னால் நிற்கக் கூடாது என்று சண்முகநாதன் கனக மாமணித் தவிசு ஒன்றை, சூரபன்மா வின் சிங்காதனத்திற்கு மேலாகத் தோன்றும்படியாக அனுப்பினான். அனுப்பிய முருகனுடைய பெருமையை அந்தச் சிங்காதனம் காட்டி யது. தன் பெருமையைக் காத்துச் கொள்ள அவன் அதை அனுப் பினான். யாராவது ஒருவர் இரந்தால் இரப்பவனை எண்ணிக் கொடுக்கிற கொடையை விடக் கொடுக்கிறவன் தன் பெருமைக்கேற்பக் கொடுக்க வேண்டும். ஒருவர் ஒரு கோவில் கட்டுகிறார். பலரிடம் பொருள் யாசித்துப் பெற்றுக் கட்டுகிறார். 300 ரூபாய் சம்பளக்காரர் 10 ரூபாய் கொடுத்