உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 கந்தவேள் கதையமுதம் தார். வருமான வரியாக மூவாயிரம் ரூபாய் மாதம் கட்டுகிறவர் 40 ரூபாய் கொடுக்கிறார். 'அவர் கொடுத்தது பத்து ரூபாய்தான், இவர் நாற்பது ரூபாய் கொடுத்தாரே' என்று நினைப்பார்களா? மாதம் மூவாயிரம் வரியாகக் கட்டுகிறவர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாமா? பாரியின் பெண்களை வளர்த்து வந்த கபிலர், அவர்களை வளர்க் கும் பொறுப்பை ஒளவைப்பாட்டியிடம் கொடுத்தார். தம் தந்தை யின் பிரிவால் அந்த இரண்டு பெண்களும் மெலிவாக இருந்தார்கள். அந்த மெலிவை நீக்க ஒரு மருத்துவரைக் கேட்டபோது, ஆட்டுப் பால் கொடுப்பது நல்லது என்று சொன்னார். ஆட்டுப்பாலுக்கு ஒளவைப்பாட்டி எங்கே போவாள் ? ஆட்டயுைம் தெரியாது; ஆடு மேய்க்கிற கோனாரையும் தெரியாது. சேர மன்னனிடம் போகவேண்டி இருந்தது ஒளவைப்பாட்டிக்கு. அப்படிச் சென்றிருந்த போது, "சேர மன்னா, எனக்கு ஓர் ஆடு வேண்டும்" என்று கேட்டார். அதைக் கேட்ட மன்னனுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ஒள வைப்பாட்டி ஆடு கேட்பது அதிசயம் அல்லவா? அவன், "நாளைக்குத் தருகிறேன் " என்று சொன்னான். மறுநாள் ஒளவைப்பாட்டி சேரன் அவைக்களத்திற்குச் சென்றபோது, பொன்னால் ஆக ஆடு ஒன்றைக் கொடுத்தான். ஒளவைப்பாட்டிக்கு வியப்பாக இருந்தது. "இது பால் தராதே!" என்றாள். சேர மன்னன் சொன்னான் ; "புலமைப் பெருமாட் டியே, உங்களுக்கு வெறும் ஆட்டையா தருவது ? நேற்றே உங்கள் இருப்பிடத்திற்கு ஒரு மந்தை ஆட்டையும் அதனை மேய்த்துப் பால் கறந்து தருவதற்குரிய ஆளையும் மற்றப் பொருள்களையும் அனுப்பி விட்டேன். உங்களிடம் கொடுப்பதற்குத் தகுதியுள்ள ஆடு இது என்றான். ஒளவைப்பாட்டி மிக மகிழ்ந்து, "சேரா, உன் ஆடு பொன்னாடு" என்றாள். உன் ஆடு பொன் ஆடு என்று சொன்ன தோடு, உன் நாடு பொன் நாடு என்று வாழ்த்தியதாகவும் அமைந்தது அவள் வார்த்தை. " கொடுப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்பக் கொடுக்க வேண்டும். இங்கே வீரவாகு தேவருக்குச் சிங்காதனம் வந்தது. அந்தச் சிங்கா