உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 361 தனம் முருகப் பெருமானுடைய தகுதிக்கேMADURA. அதைப் பார்த்தார் வீரவாகு தேவர். 'என்னுடைய நாயகன் இதை விடுத் தான்' என்று எண்ணி,முருகப் பெருமானின் திருவடியை வழுத்தி மிகவும் பணிவுடன் அதன்மேல் ஏறி இருந்தார். அனைய வான்தவிசு அவுணன்நேர் இருத்தலும், அதுகண்டு எனது நாயகள் விடுத்தனன் போலும்என்று எண்ணி மணமகிழ்ச்சியால் அறுமுகப் பிரானடி வழுத்தி விணையம் நாடுவான் இருந்தனன் ஆங்கதன் மிசையே. (n. 58. ) [வான் சுவிசு- பெருமையை உடைய சிங்காதனம். வினையம் -பணிவு-] வீரவாகு தேவரும் சூரனும் உரையாடல் ? தனக்குச் சமானமாக எதிரே மாணிக்கங்கள் பதித்த சிங்காதனத்தில் வீரவாகு தேவர் இருப்பதைப் பார்த்தான் சூரன். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் அவன் உள்ளத்தில் கோபம் உண்டாயிற்று. "தம்பி, இது என்ன சித்து விளையாட்டு ? இந்த மாதிரி விளையாட்டுகளை யார் செய்வார்கள் தெரியுமா? தம் பந்துக்களை விட்டுவிட்டு, சோறு சாப்பிடாமல், வெறும் இலையை உண்டு. விலங்குகள் திரிவதைப்போலக் காட்டில் உழன்று கொண்டிருப்பவர்கள், தம் உடம்பை வருத்துகின்ற சிறிய அறி வுள்ளவர்கள் செய்கிற காரியம் இது. நீ சின்னவன் தானே? இதைக் கற்றிருக்கிறாய் போலிருக்கிறது! எனக்கு முன்னால் அந்தச் சித்து வித்தையைக் காட்டுகிறாய். சுற்றம் நீங்கியே இலைஉண்டு விலங்கெனச் சுழன்று வற்றல் மாமரக் காட்டகத் திருந்துஉடல் வருத்தும் சிற்றுணர்ச்சியோர் வல்லசித்து இயல்புஇது ; சிறியோய், கற்று ளாய் கொலாம்! காட்டினை தமதுமுன் காண. " (அவை புகு.86.) 'இந்த வித்தையை இந்த ஊரில் உள்ள பெண்களும் செய் வார்கள். சின்னக் குழந்தைகூடச் செய்யும். கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைகூடச் செய்யும். அது மாத்திரம் அல்ல.மலை செய்யும். விலங்குகள் செய்யும். இது ஒரு பெரிய காரியம் என்ற நினைத்துச் செய்கிறாய்?" என்று சினந்து சொன்னான்.