உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 கந்தவேள் கதையமுதம் நொய்ய சொற்களால் எந்தையை இகழ்ந்தனை ; நொடிப்பின் வெளிய நாத்துமித்து உ ன்னுயிர் வாங்குவம்; விடுத்த ஐயன் ஆணைஅன்று ஆதலின், அளித்தனம்; அதனால் உய்தி இப்பகல்; வேற்படைக்கு உண்டியாய் உறைவோய்! [கொய்ய - இழிவான. நொடிப்பின்-நொடிப்போதில், அளித்தனம் - கொல்லாது விட்டோம்.] ! சூரன் கூற்று அவை புகு.148.) துமித்து - அறுத்து. சூரனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 16 15 சிங்காதனம் மேலிருந்து வந்தபோதே அவன் சினம் ஓங்கியது. வீரவாகு தேவர் பேசப் பேசக் கனலில் நெய் வார்த்தாற் போல அந்தக் கோபம் கொழுந்துவிட்டது. என்ன என்னவோ பேசுகிறாய். பல் முளைக்காத சின்னக் குழந்தை தூதாக அனுப்பினான் என்று நினைந்து உன்னைக் கொல்லாமல் விட்டேன். நீ இந்த இடத்தை விட்டுப் போகாமல் அவன் பெருமையைச் சொல்லுகிறாய். வீரம் ஏதோ சொல்கிறாய். எனக்கு உண்டாகிற கோபத்தை நீ காணவில்லை." கூரெயிறு வழாதகுழ விச்சிறுவன் உ ய்த்த சார்என நினைந்துனது தன்உயிர் விடுத்தேன்; பேரலை; அவன்பெருமை பின்னும்மொழி கின்றாய்; வீரமும் உரைக்குதி; என் வெய்யசினம் உன்னாய். - (அவை/முகு.161.) [எயிறு எழாத பல் முளைக்காத. சார் தூது . பேரலை போகாமல் இருக்கிறாய்.] "நீ எத்தனை சொன்னாலும் தேவர்களைச் சிறையிலிருந்து விடுப்பது என்பது நான் கனவிலும் நினைக்காத காரியம். நீ சிறிதும் அச்சம் இல்லாமல் என் எதிரே இருந்து பிதற்றுகிறாய். இன்னும் ஒருகணத்தில் உன் வீறாப்பு என்னாகிறதென்று காணப்போகிறேன்." சேண்புரமது ஆகிஆமர் தேவர்சிறை தன்னை வீண்படு கனாவினும் விடுக்கநினை கில்லேன்; ஏண்பல பகர்ந்தனை எனக்குஎதிர் இருந்தே ; காண்பன்அது எலாம்ஒரு கணத்தில்இனி என்றன். (அவை புகு,158.) [சேண் புரமது ஆகி அமர் -தேவலோகம் தம் டமாகத் தங்கின. பெருமை] 86 ஏன்- பார்" இன்னும் ஒரு கணத்தில் நீ படுகிற பாட்டைப் என்று சொல்லி விட்டுப் பக்கத்தில் இருந்த ஆயிரம் வீரர்களைப்