வீரவாகுவின் வீரச் செயல்கன் 363 பார்த்து, "தூதுவனாக வந்த இவனைக் கொல்லாதீர்கள். சிறையில் கொண்டு போய் அடையுங்கள் " என்று சொன்னான். கொற்றம்மிகு சூரன்இவை கூறிஅயல் நின்ற அற்றமறும் மானவருள் ஆயிரரை நோக்கி, ஒற்றுமைசெய் தோன்உயிர் ஒறுத்தல்பழி ; வல்லே பற்றி இவனைச்சிறை படுத்திடுதிர் என்றான். " (அவை புசூ. 154.) (அற்றம் அறும் சோர்வற்றமானவருள் -ஆட்களுள், ஒற்றுமை செய்தோன். ஒற்றுத் தொழில் செய்தவன்; ஒற்றன்,வல்லே - விரைவில் ] அப்போது வீரவாகு, " நான் எத்தனை அறிவுரை சொல்லியும் நீ உணர்ந்து கொள்ளவில்லை முருகப்பெருமான் பெருமையை உன் காதில் விழும்படி சொன்னேன். அவற்றை நீ கேட்கவில்லை. இனிமேல் உன்னை எம்பெருமானுடைய வேலாயுதம் அழித்திடுவது திண்ணம். அதுவரைக்கும் உன்னுடைய இந்திரியங்களுக்குரிய இன்பங்களை எல்லாம் அநுபவித்துக் கொண்டிரு. நான் போய்விட்டு வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டார். சதமுகன் வதை அப்போது சிங்காதனம் மறைந்துவிட்டது. புறப்பட்ட அவரை ஆயிரம் வீரர்களும் வந்து வழிமறித்தார்கள். அவர்களை எல்லாம் ஒரேயடியாக அழித்துக் கொன்றார் வீரவாகு தேவர். சூரன் ஆணை யால் நூறு முகமுடைய சதமுகன் என்பவன் ஒருவன் வந்தான். கொற்ற வேலுடை அண்ணல்தன் மொழியினைக் கொண்டிலன்; இகழ்ந்து என்னைப் பற்ற ஆயிரர் தங்களை விடுத்தலும், படுத்தனள், பெயர்காலை மற்றும் ஈதொரு வயவனை உய்த்தனன் மன்னவன்; இவன்ஆவி செற்று மாஙக ரந்தனை அழித்தனன் செல்லுவன் இனிஎன்றான். (சதமுகன் வதை.8.) (படுத்தளன் அவர்களை அழித்து வீட்டு; முற்றெச்சம். பெயர் காலை - வரும் போது. வயவனை -வீரளை. அழ்த்தளன் -அழித்து.) சதமுகனோடு லட்சம் பேர் வந்தார்கள்; அவர்களை அழித்தார். சதமுகன் வந்தான்; அவனையும் அழித்தார். காவலர்கள் வந்து
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/383
Appearance