364 கந்தவேள் கதையமுதம் எதிர்த்தார்கள். அவர்களையும் அழித்தார். அவரைப் பற்றப் பல பேர் வந்தார்கள். அவர் பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டார். அந்த வடிவத்தைக் கண்டே எல்லோரும் அஞ்சி ஓடினார்கள். தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் வீரவாகு தேவர் அழித்தார். மிதித்தனன்; கொதித்தனன்; விடுத்திலன் படுத்தனன்; சதைத்தளள்; புதைத்தனன் ; தகர்த்தனன்'; துகைத்தனன்; உதைந்தனன் ; குதித்தனன் ; உருட்டினன்; புரட்டினன்; சிதைத்தனன்; செருத்தனன்; செருக்கினன்; தருக்கினன். (காவலாளர், 21.) [சதைத்தனன் செதுக்கினான். செருத்தனன் போரிட்டான்.] இந்தப் பாட்டின் ஓசையே வீரவாகு தேவரின் வீரச் செயல்களை நன்கு காட்டுகிறது. இப்படிச் செய்ததனால் ஐம்பது வெள்ளம் சேனை அழிந்தது. பிறகு அந்த நகரை அழித்தான். அப்பால் ஆயிரம் தோள்களை உடைய அசுரர்கள் போரிட வந்து மாண்டார்கள். பத்துத் தலையை உடைய வச்சிரபாகு வந்து போர் செய்து அழிந்தான். இவன் சூரனுடைய மகன். இவர்களை எல்லாம் அழித்துவிட்டு வீரபாகு தேவர் மகேந்திரபுரியை விட்டு நீங்கினார். திரும்பும் வழியில் இடையில் இலங்கை இருந்தது. அங்கே ஆயிரம் யாளி முகங்களையும், இரண்டாயிரம் தோள்களையும் உடைய யாளிமுகன் இருந்தான். அவன் சண்டைக்கு வந்தபோது, அவனைத் தம் வாளால் வெட்டினார் வீரவாகு தேவர். அவன் அழிந்தான். செந்திலை அடைதல் பிறகு முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் வந்து சேர்ந்தார். பெருமானைக் கண்டவுடன் வீரவாகு தேவருடைய உள்ளம் உருகியது. கண்ணிலிருந்து தாரை தாரையாக வெள்ளம் பெருகிற்று. உடம்பெல்லாம் புளகம் போர்த்தது. பல காலம் பிரிந்த தாயைக் கண்ட குழந்தை போல அவர் அன்பு பொங்க நின்றார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/384
Appearance