வீரவாகுவின் வீரச் செயல்கள் 365 "நான் எவ்வளவோ சொல்லியும் சூரபன்மன் தேவர்களைச் சிறை விடுக்கமாட்டேன் என்று சொல்லி வீட்டான். ஆகையால் அந்த இடத்தை விட்டு நான் திரும்பினேன்" என்று சொன்னார். முருகப் பெருமானிடம் வீரவாகு தேவர் தாம் செய்த வீரச் செயல்களைச் சொல்லவில்லை. மற்றவர்களாய் இருந்தால் போன காரியத்தைச் சொல்லாமல், 'நான் அது செய்தேன்; இது செய்தேன்' என்று வீரம் பேசிக் கொண்டிருப்பார்கள். வீரவாகு தேவர் மிக்க அடக்க முடையவர். ஆகையால் தாம் செய்த வீரச் செயல்களைச் சொல்லாமல் சூரபன்மன் சொன்னதை மட்டும் சுருக்கமாகச் சொன்னார். ராமாயணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி வருகிறது. அநுமன் இலங்கைக்குச் சென்று சீதாபிராட்டியைப் பார்த்து. இலங்கையை எரி ஊட்டி,எதிர்த்த அரக்கர்களை அழித்துவிட்டு வந்தான். வந்த போது இராமனிடம் ஒன்றும் அவற்றைப் பற்றிச் சொல்லவில்லை. குறிப்பினால் வானர வீரர்கள் தெரிந்து கொண்டார்கள் என்று கம்பர் பாடுகிறார். ? முருகப் பெருமானுக்கு வீரவாகு தேவர் என்ன செய்தார் என்று தெரியாதா? அவரைப் பார்த்து, "நீ அங்கே என்ன என்ன காரியம் செய்தாய்? உன் செய்கை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! அதைச் சொல் " என்று ஏவினான். 1 என்ற காலையின் யாண்டும் வைகியே நின்று முற்றுஒருங்கு உணர்ந்த நீர்மையான், உன்றன் செய்கையுள் ஒன்றும் சொற்றிலை, நன்று மற்றுஅதும் நவிறி யால்என்றான். (விரவாகு சீட்சி. 14. ) நீர்மையான் - முருகன் நவிறி - சொல்.] அதன் பிறகுதான் வீரவாகு தேவர் தமக்கு வந்த தடைகளையும், அவற்றை எல்லாம் எம்பெருமான் திருவருளால் போக்கி வீரச் செயல்கள் புரிந்ததையும் சுருக்கமாகச் சொன்னார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/385
Appearance