உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கந்தவேள் கதையமுதம் தொடக்கம் உற்றுவாழ் சூரன் மாநகர் அடுத்த காலையின் அகன்ற வேலையில் தடுத்து ளோரைநின் சரண வன்மையால் படுத்து வந்தனன்; பான்மை ஈதுஎன்றான். (விரவாகு மீட்சி. 15.) [தொடக்கம் - முகளில், மா நகர் உற்று. வேலையில் - கடலின் நடுவில், படுத்து- அழிந்து.] உடனே முருகப் பெருமான், "சூரபன்மன் அழிவது அவன் தலைவிதி. அதனால்தான் தேவர்களைச் சிறை விடமாட்டேன் என்று சொல்கிறான். நாளைக்கே புறப்பட்டு அங்கே செய்யவேண்டியதைச் செய்யலாம்" என்று திருவாய் மலர்ந்தருளினான். வீத லேஅவன் விதியது ? ஆதலின் தீதில் விண்ணவர் சிறைவி டோம்என ஓதினான்; அவன் உயர்வு நீக்குவான் போதும் நாளையாம் எனப்பு கன்றனன். (விரவாகு மீட்சி.19.] (னீதலை - அழிவதே, போதும் - போவோம்.] வீரவாகு தேவர் தனியாக இந்திரனிடம் போய், சயந்தனைப் பார்த்ததையும், அவன் இருக்கிற நிலையையும் சொல்லி அவனைத் தேற்றினார்.