தேவாகரப் போர் சூரன் துயரம் சூரபன்மன் தன்னுடைய மகனாகிய வச்சிரபாகுவும், படை வீரர்களும் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டான். அவனுக்குத் துயர் உண்டாயிற்று. கண்ணில் தாரை தாரையாக நீர் பெருகியது. பெருமூச்சு விட்டான். முன்பே இருந்த சோகம் அதிகமானதால் பல பல புலம்பினாள். கண்ணிடை நெடும்புனல் கால, மைத்தன்மேல் உள்திகழ் அன்புசென்று உயிரை ஈர்ந்திடத் துண்ணென உயிர்ப்பெனும் புகையும் சுற்றிட எண்ணரும் செல்லல்கொண்டு இரங்கி ஏங்கினான். (சூரன் நகர் புரி.3. ) [கால் - வழிய.உயிர்ப்பு பெருமூச்சு. ஈர்ந்திட -பிளக்க. செல்லல் - துயரம்.] "நான் இருந்து என்ன பயன்?" என்று நைந்து கூறினான்; இப்பொழுதே போய் எல்லோரையும் அழிப்பேன் என்றான். தருமகோபன் கூற்று அப்போது தருமகோபன் என்ற அமைச்சன் எழுந்தான். அவன் பெயரைப் பார்த்தாலே அவன் இயல்பு தெரிகிறது; தருமத் தைக் கோபிப்பவன் அவன். "உனக்கு உலகில் யாருக்கும் இல்லாத பலம் இருக்கிறது. மிகப் பெரிய வளம் பெற்றிருக்கிறாய். ஆயிரத் தெட்டு அண்டங்களை, தூற்றெட்டு யுகங்கள் ஆட்சி செய்வதற்குரிய வரம் இருக்கிறது. உன் உடம்பு வச்சிரத்தாலானது. முப்பத்து முக்கோடி தேவர்களும், அறுபத்தாறு கோடி அசுரர்களும் உன் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பணத்தாலும்,பலத்தாலும், பதவியாலும்,உடம்பு வளத்தாலும், பெற்ற வரத்தாலும் மிகச் சிறந்து விளங்குகிற நீ ஒரு சாதாரண மனிதன் புலம்புவது போலப் புலம்பலாமா?" என்று (கேட்டான். மெய்ப்புவி ஆண்டங்கள் பரித்த மேன்மையை ; ஒப்பரும் திருவினை ; உலப்பில் ஆயுளை; செப்பருந் திறலினை ; சிறந்த கீர்த்தியை ; இப்பரிசு அழுங்குதல் இயற்கை ஆகுமோ? (சூரன் நகர் புரி .9.) [பரித்த மேன்மையை - தாங்கிய பெருமையை உடையாய். திருவிளை - ஐசுவரி யத்தை உடையாய். உலப்பில் அழியாக. அழுங்குதல் -வருந்து,தல்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/387
Appearance