வுள் வாழ்த்து 19 துக்கு அடுத்தபடி வான் சிறப்பை வைத்தார். மனிதனுடைய முயற் சிக்கு அப்பால் உள்ளது மழை. இறைவன் திருவருள்போல அது பொழிகிறது. இறைவன் திருவருட் சம்மதம் இல்லாமல் மழை பெய்யாது. தெய்வ ஆற்றலாலன்றி மழையினால் உலகம் வளம் பெறாது. ஆகவே இறைவனை வாழ்த்தின பிறகு வான் முகிலை வாழ்த்துகிறார். மழை பெய்தால்தான் வளம் சுரக்கும். எனவே தொடர்ந்து, மலிவளம் சுரக்க! என்கிறார், மழை பெய்தாலும் வளம் சுரக்காமல் இருக்கலாம். பரந்த கடலில் போய்ப் பெய்துவிட்டால் பூமிக்கு ஒரு நலமும் இல்லை. பூமி எங்கும் பரந்து மழை பெய்தால்தான் வளம் சுரக்கும். ஆகவே மழை பெய்தால் மாத்திரம் போதாது. பெய்ய வேண்டிய இடத்தில் பெய்தால்தான் வளம் சுரக்கும் என்பதை எண்ணி இரண்டையும் தனித்தனியே சொன்னார். மழை பெய்து, வளம் சுரந்தால்தான் மன்னன் முறை செய்யலாம். மன்னன் முறை செய்யாவிட்டால் வளம் எத்தனை இருந்தாலும் பயன் இல்லை. மன்னன், கோல்முறை அரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க! இறைவன் திருவருளால் மழை பெய்து, வளம் பெருகி, மன்ன னது ஆட்சியும் முறையாக அமைந்திருந்தால் குறைவில்லாது உயிர்க் கூட்டங்கள் இனிது வாழும் என்பதைப் புலப்படுத்துகிறார். அடுத்து வருகிறது, நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! என்பது. உலகத்தில் வாழுகின்ற மக்கள் அறம் செய்து வாழவேண்டும். அறம் என்பதற்கு வரையறுக்கப்பட்டது என்பது பொருள். காலத் திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறு விதமான நியதியைப் பெரியவர்கள் சொல்வார்கள். ஓரிடத்தில் பயன்படுகிற முறை வேறு ஓரிடத்தில் பயன்படாது. குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள் கம்பளி போர்த்துக்கொள் வார்கள். குளிர்காலத்தில் மட்டும் நாம் கம்பளி போர்த்துக்கொள்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/39
Appearance