ZO கந்தவேள் கதையமுதம் திறோம். வெயில் காலத்தில் நாம் போர்த்துக்கொள்வதில்லை. இது காலத்தாலும், இடத்தாலும் மாறுபடுவது. . காலத்தாலும், இடத்தாலும் மாறுபடாத அடிப்படை அறங் களைச் சொல்வது வேதம். வேத நெறிக்கு உட்பட்டவர்களைத்தான் இந்துக்கள் என்று சொல்கிறோம். நம் நாட்டில் கன்னியா குமரி முதல் இமாசலம் வரைக்கும் ஒரே பண்பாடு இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வெவ்வேறு வகையான ஆடை, வெவ்வேறு வகையான உணவு, பழங்க வழக்கங்கள் இருந்தாலும் நம் வாழ்க்கையின் கடைப்பிடிகளை நினைவூட்டுவதற்குத் தக்க கருவி யாக விளங்குவது வேதம். அது பொதுவானது. இந்துக்கள் யாவரும் வேதநெறி வழியே ஒழுகுபவர்கள்; வைதிகர்கள். i வேதமும் தமிழ்நாடும் இப்படிச் சொல்லும்போது சிலருக்குச் சந்தேகம் உண்டாகும். "அந்தணர்களுக்குத்தானே வேதம்? மற்றவர்களுக்கு ஏது வேதம்?" என்று கேட்பார்கள். அந்தணர்கள் வேத அத்தியயனம் பண்ணவும், பிறருக்குக் கற்பிக்கவும் கடமைப்பட்டவர்கள். முதல் மூன்று வருணத்தார்களுக்கும் வேத அத்தியயனம் செய்யும் உரிமை உண்டு. வேதத்தை ஓதுவிக்கும் கடமை அந்தணருக்கே உரியது. வேதநெறிப் படி எல்லே ரும் நடக்க வேண்டும். ஆகவே இந்துக்களாகப் பிறந்த அனைவரும் வைதிகர்கள், வேதத்தைப் பாராயணம் பண்ணி, பிறருக் கும் கற்பிப்பதற்கு அந்தணர்கள் கடமைப்பட்டவர்கள் என்பதனால் அவர்களுக்கே அது சொந்தம் என்று சொல்ல முடியாது. ஒரு பாங்கில் பணத்தை எடுத்துக் கொடுக்கிறவர் காஷியர். அவர் அங்குள்ள பணத்தை எடுத்துக் கொடுப்பதனால் அந்தப் பணம் அவருக்கே சொந்தம் என்று சொல்ல முடியாது. பணம் போட்டவர் கள் எல்லோரையும் சேர்ந்தது அது. அவரவர்கள் போட்டுள்ள பணத்தை அவரவர்கள் வந்து கேட்கும்போது எடுத்துக் கொடுப்ப தற்கு அங்குள்ள காஷியர் சம்பளம் வாங்கிக்கொள்கிறார். அதற்காக, பணம் போட்டவர்களது கணக்கை வைத்துக்கொள்கிறார். அது போல அந்தணர்கள் வேதத்தை அத்தியயனம் பண்ணி, பிறருக்குச் சொல்லிக்கொடுத்துப் பாதுகாக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் அந்த வேதம் உரியது என்று சொல்வது சரியன்று.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/40
Appearance