தேவாசுரப் போர் 377 "மோனம் என்பது ஞான வரம்பு" என்று ஔவைப்பாட்டி பாடினாள். நம்முடைய உள்ளத்திற்குள் ஆண்டவன் விளக்குப்போலச் சுடர்விடுகிறான். ஆனால் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. ஐந்து இந்திரியங்களாகிய வாயிலைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் அந்தச் சுடர் அலைகின்றது. நன்றாக எரிகிறது தெரியவில்லை.எல்லாச் சன்னல் களையும் அடைத்தால் இந்த விளக்கு நன்கு எரியும். அதைத் தெரிந்துகொள்ளலாம். மோனம் என்பது மூன்று வகை : காஷ்ட மெளனம், வாங் மெளனம்,மனோ மெளனம் என்று சொல்வார்கள். உடம்பிலுள்ள உறுப்புக்கள் அசையாமல் கட்டைபோல இருப்பது காஷ்ட மௌனம்; வாய் பேசாமல் இருப்பது வாங் மெளனம். இந்த இரண்டும் முயன்றால் கைகூடும். மனே மெளனம் என்பது மனம் அலைப்பு இல்லாமல் இருப்பது: இது ஆண்டவன் திருவருளால்தான் கிடைக்கும். முழு மௌனம் வந்துவிட்டால் ஞானம் தலைப்படும். இந்த முழு மௌனம் இல்லாதவர்கள் இறைவனைக் காண முடியாது. ஞானந் தான்உரு வாகிய நாயகன் இயல்பை யானும் தீயுமாய் இசைத்தும்என் றால்அஃது எளிதோ? மோனம் தீர்சுலா முனிவரும் தேற்றிலர்; முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை. (சூரபன்மன் அமைச்சியல். 128. [இசைத்தும் - சொல்வோம். தேற்றிலர் - தெரிந்துகொள்ளவில்லை.] 'சும்மா இருசொல்லறளன் றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே" } என்று அருணகிரியார் பாடுகிற பாடலில் இந்த மூன்று வகையான் மௌனங்களையும் சொல்கிறார். சும்மா இரு என்பது காஷ்ட மெளனத்தையும், சொல் அறுதல் என்பது வாங்மௌனத்தையும், ஒன்றும் அறிந்திலனே என்பது மனோமௌனத்தையும் சொல்வன. முன் இரண்டையும் அப்பியாசத்தால் செய்யலாம். பின்னது இறைவன் திருவருளால் கிடைப்பது. அரைகுறை மௌனியாக இருக்கிற முனிவர்கள் இறைவனைக் காண முடியாது. அதைச் சிங்கமுகன் சொன்னான். 48
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/397
Appearance