உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கந்தவேன் கதையமுதம் மோனம் தீர்சுலா முனிவரும் தேற்றிலர்; முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை என்றான். . தானும் காண்கிலன்' என்று இந்தப் பாட்டின் ஈற்றடியில் வருகிறது. தன்னைப் பற்றித் தானே தெரிந்துகொள்ளாமல் இருக்கிறானாம் இறைவன். பாரத நிகழ்ச்சி பாரதத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, பின்பு ஓராண்டு விராட் நகரத்தில் மறைவாக வாழ்ந்தார்கள்; அஞ்ஞாதவாசம் செய்தார்கள். 13 ஆண்டுகள் ஆன பிற்பாடு வெளிப்பட்டார்கள். அப்போது என்ன செய்யலாம் என்று பஞ்சபாண்டவர்களைக் கண்ணபிரான் கேட்டான். தருமர், "நாம் மறுபடியும் காட்டுக்கே போய் வாழலாம்" என்றார். "அன்று நீங்கள் எல்லாம் சபதம் செய்தீர்களே, அது என்ன ஆகும்?* என்று கேட்டான் கண்ணன். அப்படியானால் நீ தூது போய் வா என்று தருமராஜா சொன்னார். பீமன் கண்ணனைப் பார்த்து, "என்னைத் தூது அனுப்புங்கள். நான் போய் அவர்களைச் சங்காரம் செய்துவிட்டு வருகிறேன் என்றான். இப்படி ஒவ்வொரு வரும் ஒவ்வொன்று சொன்ஞர்கள். கடைசியில் சகாதேவனைப் பார்த்து, 'உன்னுடைய கருத்து என்ன?" என்று கண்ணன் கேட்டான். tr "நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? கடைசியில் நீ எதை நினைத்திருக்கிறாயோ அதுதான் முடியும்" என்று அவன் சொன்னான். 4 எல்லோரும் ஒருவிதமாகச் சொல்ல இவன்மாத்திரம் இப்படிப் பேசுகிறானே !' என்று கண்ணன் யோசித்தான். 'இவனுக்கு ஏதோ இரகசியம் தெரியும் போலிருக்கிறது, எல்லோருக்கும் மத்தியில் கேட்டால் இவன் எதையாவது அவிழ்த்துவிடப் போகிறான்' என்று அவனைத் தனியாக அழைத்துப் போய், "நீ என்ன சொல்கிறாய்? உன் கருத்து என்ன?" என்று கேட்டான். "கண்ணா,நீ எல்லோரை யும் பாரத யுத்தத்தில் தீர்த்துவிட எண்ணியிருக்கிறாய். பூமி