தேவாசுரய் போர் 395 பெரும் போர் மூண்டது. வீரவாகு தேவர் பல விதமான அஸ் திரங்களை விட்டார். அவை சூரன்மேல் பட்டு வலியிழந்து போயின. அவன், "உன் படைகள் எல்லாம் என்ன ஆயின,பார். என்னுடனா போர் செய்ய வந்தாய்?” என்று சினந்து தன் கதையி னால் வீரவாகு தேவரின் மார்பில் அடித்தான்.அப்போது தேவர் மயங்கி வீழ்ந்தார். ஆழ்ந்திடு சோரியன், அவுணன் தண்டினால் போழ்த்திடு மார்பினன், புகையும் நெஞ்சினன், தாழ்ந்திடும் விறலினன், தளரும் யாக்கையன், வீழ்ந்தனன், ஆமரர்கள் வெருவி ஓடவே. (இரண்டாம் நாள்.227.) (ஆழ்ந்திடு சோரியன் - இரத்தப் பெருக்கில் ஆழ்ந்தவள். தண்டினால் - கதா யுதத்தால்.) விசாலி என்ற தேர்ப்பாகன் தேரை ஒரு பக்கம் கொண்டு போனான். இப்படி எல்லோரும் வலியிழந்ததை முருகன் பார்த்தான். போர் முகத்திற்குத் தன் தேரை விடச் சொன்னான். போர்க்களத்திற்கு முன்வந்து நிற்கும் முருகப் பெருமானைச் சூரபன்மன் பார்த்தான். முண்டகம் மலர்ந்த தென்ன மூவிரு முகமும் கண்ணும் குண்டல நிறையும் செம்பொன் மவுலியும் கோல மார்பும் எண்தரு கரம்ஈராறும் இலங்கெழிற் படைகள் யாவும் தண்டை யும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான். [முண் .கம்-தாமணர். நிரை-வரிசை. {இரண்டாம் நாள்.230.1 மவுலி - முடி.] முகம், கண், கிரீடம், குண்டலம்,படை,கால்,தண்டை, சிலம்பு முதலியன எல்லாம் அழகாகத் தெரிந்தன. அவற்றைக் கண்டான் சூரன். அநுபவித்தான் என்று சொல்லவில்லை. "இப்படிக் காண்பதற் குரிய பெரிய தவம் அவன் பண்ணி இருந்தான். அவன் இந்த யுத்தத்தில் வென்றால் என்ன? தோற்றால் என்ன? போதத்தில் சிறந்த ஞானி களின் நெஞ்சினால் உன்னவொண்ணாத குமார மூர்த்தியைக் கண்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/415
Appearance