396 கந்தவேள் கதையமுதம் முன்னால் காண்கிறானே, அதுவே பெரிய பாக்கியம் அல்லவா? அவனது தீமை அப்பொழுதே கழிந்தது போலாயிற்று அல்லவா ?" என்கிறார் கச்சியப்பர். எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர தாற்றித் துஞ்சில்லன்? தொலைவுற் றால்என்? தூயவா லறிவின் மிக்கோர் நெஞ்சினும் அளத்தற் கொண்ணா திருமலக் குமர மூர்த்தி செஞ்சுடர் வடிவம் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான். (இரண்டாம் நாள்.287) எஞ்சல் இல் - அழிவில்லாத. துஞ்சில் - இறந்தால்.] சூரபன்மன் முருகனைப் பார்த்து, "இங்கே வந்தவர்கள் எல்லோரும் அழிந்து போனர்கள், உன் படைகள் வலிமை ஒழிந்தன. உன் படைகளுக்கு எல்லாம் தலைவனாக முன்பு தூதுவனாக வந்த வீரனும் சண்டையிட்டு உயிர் இழந்துவிட்டான். நீ சிறு பிள்ளை. நீயா என்னோடு போர் செய்து வெற்றிபெற வந்திருக்கிறாய்? உன் துணிச்சல் நன்றக இருக்கிறது !" என்று கூறி நகைத்தான். இற்ற நின்பெரும் படைக்கெலாம் தலைவனாய் என்பால் ஒற்று வந்துள வீரனும் பொருதுஉயிர் ஒழிந்தாள்; மற்று நீஒரு பாலனே என்னொடு மலைந்து கொற்றம் எய்துதி ? நன்றுநன்று உன்னக் குறிப்புச் (இற்ற-அழிந்த. மலைந்து போர் செய்து. (இரண்டாம் நாள்-248.) கொற்றம் - வெற்றி.] அதற்கு முருகன் பதில் சொன்னான்; "நமக்கு வெற்றி முன்னாலே உண்டாயிருக்கிறது, நாம் அதிக ஆற்றல் உடையோம், பெரிய புகழையும் படைத்திருக்கிறோம், சேனையாகிய பெருங்கடல் நமக்கு உள்ளது என்று அகந்தை கொள்ளாதே. அவற்றை எல்லாம் விரைவில் மாற்றிவிடுவேன். போர் செய்" என்றான். வெற்றியும் உடையம், ஆற்றல் மிகுதியும் உடையம், மேன்மை பற்றியும் உடையம், எண்ணில் படைகளும் உடையம், வியாப் பெற்றியும் உடையம், தானைப் பெருங்கடல் உடையம், என்று மற்றினி அகத்தை கொள்ளேல்; மாற்றுகம் வல்லை மன்னோ. (இரண்டாம் நாள்.249.) (வீயாப் பெற்றி அழியாத இயல்பு, தாளை -சேனை. மாற்றுகம் - அழிப்போம்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/416
Appearance