உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 397 போர் மூண்டது. முருகன் விட்ட சக்கரம் எல்லா வீரர்களையும் அழித்தது. சூரன் பிரமாஸ்திரம், நாராயணாஸ்திரம் ஆகியவற்றை விட்டான். முருகப்பெருமானது வேல் அவற்றை விழுங்கியது. சூரன் பாசுபதாஸ்திரத்தை விட்டான். முருகப்பெருமான் கையை நீட்ட அது அவன் கையில் வந்து சேர்ந்தது, கொடுத்தவன் வாங்கிக் கொண்டாற்போல. அதைச் சூரன் கண்டு வியந்தான். "உண்மையில் இவன் மகா வீரனே. இவனோடு போர்செய்வதற்கு என்னைத் தவிர வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது?" என்று முருகனைப் புகழ்ந் ததோடு தன்னையே உயர்த்திக் கொண்டான். என்னொ டேபொரற்கு இவனலால் வேறிலை; இனையோன் தன்னோ டேபொரற்கு வானலாது இலை:இது சரதம்; அன்ன பான்மையின் எனக்குநே ராம்இவன் அலது பின்னை யார்உளர் தமியனுக்கு உவமையாப் பேச ? (இரண்டாம் நாள். 310.) (சரதம் - உண்மை. தமியனுக்கு-ஒப்பில்லாத எனக்கு.] முருகப்பெருமான் சூரனுடைய படைகளை எல்லாம் அழித்தான். தனியாக நின்றான் சூரபன்மன். அவனைப் பார்த்து முருகன் பேச லானான். "என்னிடத்தில் தாரகனைக் கொன்ற வேல் இருக்கிறது. அதுவே இப்போது உன்னையும் கொன்றுவிடும். அது அரிய காரியம் அன்று. ஆயுதம் அற்ற உன்னை அழித்தால் பழியாகிவிடும். அதனால் நாம் தாமதிக்கிறோம். " தெடிய தாரகற் செற்றவேல் இருந்தது ; நின்னை அடுதல் இங்கொரு பொருளுமன்று; அரிதுமற் றன்றல்: படைஇ ழந்திடு தின்உயிர் உண்டிடின் பழியாய் முடியும் என்றுதாழ்க் கின்றனம், தருமத்தின் முறையால். (இரண்டாம் நாள்.316.) (செற்ற - கொன்ற. தாழ்க்கின்றனம் - தாமதம் செய்கின்றோம்.] "நீ தேவர்களைச் சிறைவிட்டுவிட்டாயானால் உன்னுடைய உயிரைப் போக்க மாட்டோம். நீ அப்படிச் செய்யாமல் மறுத்தா யானால் உன்னைச் சங்காரம் பண்ணிவிடுவோம். உன் எண்ணம் என்ன?" என்று கேட்டான்.