398 கந்தவேள் கதையமுதம் பன்னு கின்றதென் பற்பல ? விண்ணுளோர் பலரும் துன்னு தொல்சிறை விடுத்தியேல், உண்உயிர் தொலையேம்; அன்ன தன்மையை மறுத்திடின் ஒல்லைதாம் அடுதும்; என்னை கொல்உன தெண்ணங்கள்? உரைத்தியால் என்றான். (இரண்டாம் நாள். 17.) [பன்னுகின்றது - திருப்பித் திருப்பிச் சொல்வது. ஒல்லை - விரைவில். அடுதும்- சங்காரம் செய்வோம்.] மிகவும் பொல்லாதவனாகிய சூரன் தன் முன்னால் நிற்பதைக் கண்டு முருகன் அவனை அழித்திருக்கலாம். ஆனால் அறத்தையும், கருணையையும் உடைய எம்பெருமான் ஆயுதம் இன்றி இருக்கிற அவனைக் கொல்வது அறம் அன்று என எண்ணினான். ஒருகால் மனம் மாறித் தன்னுடைய தவறுகளை மாற்றிக் கொண்டான் என்றால் அவனை மன்னித்துச் சுகமாக இருக்க விடலாம் என்ற கருணைத் திறம் காட்டினான். அதனால் அப்படிச் சொன்னான், சூரன் அப்போது நினைத்தான்; 'என்னை இவன் கொல்ல முடியாது. நான் வச்சிர சரீரம் உடையவன். ஆனால் இப்போது இவனை என்னால் வெல்லவும் முடியாது. இன்றைக்கு நகரத்திற்குத் திரும்பிச் சென்று மறுபடியும் நாளைப் படைகளுடன் வந்து போர் செய்யலாம் என்று எண்ணி மாயத்தினால் மறைந்து தன் அரண்மனைக்குப் போய்விட்டான். என்னை அங்கவன் முடித்திடல் அரியதால் ; யானும் அன்ன வன்றனை இத்துணை வெல்வதும் அனைத்தே தொன்ன சுர்ப்பெரு வளத்தொடும் படையொடும் துன்னிப் பின்னர் வந்துஅமர் இயற்றியே பெருந்திறல் புரிவேன். இரண்டாம் நான். 323. [இத்துணை இவ்வளவில்] மூன்றாம் நாள் போர் மூன்றாம் நாள் யுத்தத்திற்குப் பானுகோபன் புறப்பட்டான். அப்போது மாயை பல அஸ்திரங்களைக் கொடுத்தாள். பானுகோபன் பல விதமான ஆயுதங்களுடன் போருக்கு வருகிறான் என்பதை வீரவாகு தேவர் அறிந்தார். அவர் அவனோடு சண்டையிடுவதற்கு முருகப் பெருமான் ஆணையைப் பெற்றுச் சென்றார். வீரவாகு தேவருக்கும், பானுகோபனுக்கும் பெரும் போர் மூண்டது. வீரவாகு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/418
Appearance