உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 கந்தவேள் கதையமுதம் படை போய்விட்டது. அங்கே கிடந்தவர்கள், தூக்கம் நீங்கி எழுந்து பழைய ஞானம் பெற்றவர்களைப் போல மிகவும் மகிழ்ச்சி யோடு இருந்தார்கள். அடைதரு கின்ற முன்னர் அவர்உணர்வு உண்ட மாயப் படையது தீங்கிற் றகப் பதைபதைத்து உயிர்த்து மெல்ல மடிதுயில் அகன்று கொல்லை வாலறிவு ஒருங்கு கூடக் கடிதிவில் எழுந்தார், அங்கண் உ தித்திடு கதிர்கள் என்ன. (மூன்றாம் நாள். 206.) (உயிர்த்து - மூச்சு விட்டு, மடி துயில் -படுத்துக்கிடந்த தூக்கம். வாலறிவு தெளிந்த அறிவு. கடிதினில்-விரைவில் ] அப்போது மயக்கம் தீர்ந்து வேலாயுதத்தைப் பார்த்து வீரவாகு தேவர், "நீ முருகப் பெருமானுக்குச் சமானம். உன்னுடைய கிருபையால் இந்தக் கவலையை நீத்தோம். உன்னை எம்பெரு மானாகவே நினைக்கிறோம்" என்று சொன்னார். அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால் எந்தைகண் நின்றும் வந்த இயற்கையால் சத்தி யாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான் கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம். (மூன்றாம் நாள். 312.) [எந்தைகண்நின்றும் - சிவபிரானிடத்திலிருந்தும், சிவபிரான் நண்ணிலிருந்தும்.] வேலுக்கு ஒரு தனிப் பெருமை. முருகன் ஒளி உடையவன். வேலாயுதமும் ஒளி உடையது. அதைத்தான் 'அந்தமில் ஒளியின் சீரால்' என்றார். முருகனுக்கு ஆறுமுகம் உண்டு. வேலுக்கும் ஆறு பட்டைகள் உண்டு. அதனால் தான் 'அறுமுகம் படைத்த பண்பால் என்றார். முருகன் சிவபெருமானிடத்துத் தோன்றினான். சிவ பெருமானே முருகனுக்கு வேல் தந்தார். முருகன் சிவனுடைய சக்தி. வேலுக்கும் சக்தி என்ற பெயர் உண்டு. இவற்றால் வேலும்,