உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 401 முருகனும் வேறல்ல, இரண்டு பேரும் ஒப்பவர்கள் என்று வீரவாகு தேவர் சொன்னார். பல சமயங்களில் வேலையே முருகனாக வைத்து வழிபடும் வழக்கம் உண்டு. வேலையே நட்டு வழிபடும் இடத்தை வேற்கோட்டம் என்று சொல்வார்கள். அதைப்பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன். வேலுக்கும் வேலனுக்கும் வேறுபாடு இல்லையென்பதை உணர்ந்து வீரவாகு தேவர் வேலைப் புகழ்ந்தார். அந்த வேல் அவர்களை எல்லாம் இறைவனிடத்தில் அழைத்துச் சென்றது. வீரவாகு தேவர் செய்த சபதம் சண்டை வீரவாகு தேவர் அப்போது ஒரு சபதம் செய்தார். போடுவதற்கு ஆற்றானாகி, வஞ்சனை புரிந்து, நம்மை மாயத்தால் வென்ற கள்வனாகிய பானுகோபனின் உயிரைக் குடித்தாலன்றி முருகப் பெருமானின் திவ்ய பாதாரவிந்தத்தை நான் போய்க் காணப் போவதில்லை " என்று சூளுரை செய்தார். வெஞ்சமர்க்கு ஆற்றல் இன்றி வெருவிப்போய் விண்ணில் நின்று வஞ்சனை புரித்து நம்மை மாயத்தால் வென்று மீண்டும் ஞ்சனன் இருந்த கள்வன் உயிர்குடித்து அன்றி ஐயன் செஞ்சரண் அதனைக் காணச் செல்லுவ தில்லை யானே. (நகர் புகு .3.) [சமர்க்கு - சண்டை செய்வதற்கு. ஆற்றலின்றி - வலிமையில்லாமல்.] சபதம் செய்த பிறகு அவருக்கு ஓர் ஊக்கம் உண்டாயிற்று. நாமே ஏதேனும் ஒரு கொள்கை வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்தால் ஊக்கம் உண்டாகும். நமக்கு வேண்டிய உபகரணங்கள் எல்லாம் இருந்தும் கொள்கை இல்லாமையினால் நம்மால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடிவதில்லை. நாம் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. "ஒருவன் தான் எண்ணியதை எண்ணியபடி அடையலாம். என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படி அவர் சொல்லும்போது 51