உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 கந்தவேன் கதையமுதம் குழந்தையாக இருக்கும்போது தின்பண்டங்கள் தின்ன ஆசை உண்டாகிறது. அப்போது எது சுவையாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கிறோம். அப்போது ஒரு வகை அறிவு இருக்கிறது. அப்போதே நம் வாழ்க்கையின் குறிக்கோள் இன்னது என்று தெரிந்துகொள்ளலாம். அப்போதும் தெரிந்து கொள்ளவில்லை. அப்பர் சுவாமிகள், "குறிக்கோள் இலாது கெட்டேன்" என்று சொல்கிறார். 'குழந்தையாக இருக்கிற போது ஓரளவு அறிவு பெற்றேன். அப்போதே குறிக்கோளைத் தெரிந்துகொண்டிருக்கலாம்; தெரிந்துகொள்ளவில்லை. பின்பு இளைஞன் ஆனேன். நல்ல சுகம் இன்னது என்று தெரிந்து கொண்டேன். மங்கைமார்களுடன் சேர்ந்திருத்தல் சுகம் என்று தெரிந்தது. அந்தப் பருவத்திலும் என்னுடைய குறிக்கோள் இன்னது என்று தெரிந்துகொள்ள வில்லை. அதற்குப் பிறகு முதுமை வந்தது. ரெயில் வருவதற்கு முன் னால் முதல் மணி அடிப்பதைப்போல நரை, திரையாகியவை வந்து விட்டன. அடுத்தது மரணந்தான். அப்போதும் என்னுடைய குறிக்கோளைத் தெரிந்துகொள்ளவில்லையே!' என்கிறார். 26 பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை யார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்.' நாமும் ஆழ்வார்கள், ஞானசம்பந்தர் ஆகிய பெருமக்களைப் போலக் கருவிகரணங்களைக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவர்கள் எல்லாம் வாழ்நாளின் குறிக்கோள் என்ன, லட்சியம் என்ன என்பதைக் தெரிந்து கொண்டார்கள். நாம் தெரிந்து கொள்ளவில்லை. ஆண்டவன் நமக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்திருக் கிறான். என்ன செய்ய வேண்டுமென்ற ஞாபகம் இல்லாமல், குறிக்கோள் இல்லாமல், நாம் வாழ்கிறோம். "பானுகோபனை அழித்தாலன்றி, நான் எம்பெருமான் திரு வடியைக் காணமாட்டேன்' என்று சங்கற்பம் செய்து கொண்டார் வீரவாகு தேவர்.