உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கந்தவேள் கதையமுதம் அறிவு மூன்று வகையினால் வரும். சுருதி, யுக்தி, அநுபவம் என்று சொல்வார்கள். சுருதி என்பது நூல். பெரியவர்கள் தம் அநுபவங்களை நிலையாக நூல்வடிவில் எழுதிவைத்திருக்கிறார்கள். அவற்றைக் கொண்டு அறிவு பெறலாம். யுக்தி என்பது சொந்த அறிவால் இப்படிச் செய்தால் இப்படியாகும் என்று தெரிந்து கொள்வது. அநுபவம் என்பது நாம் நம் அநுபவத்திலே தெரிந்துகொண்டது. இப்போது யுக்தியினாலும், அநுபவத்தினாலும் அறிந்தவற்றை இரணியன் சொன்னான். இரணியன் போர் செய்து மறைதல் அவன் யோசனையைக் கேட்டபோது சூரனுக்குக் கோபம் வந்தது.பாம்புக்குப் பால் வார்ப்பது கெடுதியாகவே முடியும். 'நாம் சொல்வதை இவன் கேட்கமாட்டான்' என்று இரணியன் உணர்ந்த உடனே, சூரனைப் பணிந்து, நான் சொன்ன வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்வாயாக ; நான் போருக்குப் புறப்படுகிறேன்' என்று சொல்லிக் கிளம்பினான். .6 போர் நடந்தது. நிச்சயம் இந்தப் போரில் நாம் இறக்கப் போகிறோம் என்பதை அவன் உணர்ந்தான். தன் தந்தையும் பிழைக்கமாட்டான் என்பதை அறிந்துகொண்டான். அவன் இறந்த பிறகு தந்தைக்கு ஈமக் கடன் ஆற்ற யாரும் இருக்க மாட்டார்கள். * தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய கடன் இருக்கிறது; ஆகவே நாம் இங்கே இருக்கக் கூடாது. இவர்கள் எதிரில் இல்லாமலேயே மறைந்து விடவேண்டும்' என்று போர்க் களத்தை விட்டு ஓடிவிட்டான். மைந்த னைப்பெறு கின்றதும் மாசிலாப் புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும் தந்தை மாண்டுழித் தம்முறைக்கு ஏற்றிட அந்த மில்கடன் ஆற்றுதற் கேயன்றோ ? - இரணியன் யுத்தப்.126.) [போற்றி-பாதுகாத்து.கடன் மைக் கடன்.] ஒரு மந்திரத்தை உச்சரித்து, மீன் உருவம் எடுத்துக்கொண்டு, கடலுக்குப் போய் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டான்.