தேவாசுரப் போர் ஆவ துள்ளிஎன் ஆருயிர் போற்றியே போவ தேகடன், என்று பொருக்கௌத் தாவி வான்முகில் தன்னிடைப் போய்ஓரு தேஷ மந்திரம் சிந்தையில் உன்னினான். உள்ள லோடும் உருஅரு வாதலும் தள்ளை யாரும் தெரிவரும் தன்மையால் பொன்உலாய புணரியஃபோயினான் மின்னு தண்சுடர் மின்உரு வாகியே. 407 ( இரணியன் புத்தப், 129, 130.) (பொருக்கிகன் விரைவில். உரு அருவாதலும் - வடிவம் பொன் - செல்வம். புணரி - கடல்.] நான்காம் நாள் அக்கினிமுகாசுரன் போர் மறைந்தவுடன், போர் மூன்றாம் நாள் போர் முடிந்தது. நான்காம் நாள் தொடங்கியது. சூரனுடைய மகன் அக்கினிமுகாசுரன் போருக்கு வந்தான். அவன் சந்திரனைச் சிறை செய்தவன். அவனுக்கும் வீரவாகுவுக்கும் போர் நடந்தது. நவ வீரர்களில் ஏழு பேர் மாண்டார்கள். அத்தனை பேரும் கைலாசத்திற்குப் போய்விட்டார்கள். வீரத்துடனும், சினத்துடனும் வீரவாகு தேவர் கையில் வாளுடன் வந்தார். அப்போது அக்கினி முகாசுரன் சபதம் செய்தான். பூண்பால் மூலைமாதர் புணர்ச்சியெனும் மாண்போர் தனிலேவலி அற்றுஅழியும் ஆண்பால் ஒருவன்அவ னே அலனோ ? ஏண்பால் உனையான் இவன் வென்றிலனேல். (அக்கினிமுகாசுரன் வதை. 73.) 19 "உன்னை நான் வெல்லா விட்டால் பெண்களோடு போகம் புரிவதில் வலியில்லாமல் போகும் ஆண்மகன் ஆவேன் என்று சபதமிட்டான். சபதம் செய்வதிலேயே ஒருவனது மன இயல்பு தெரியும். இவனுக்குக் காமம் மிகுதி என்பது இந்தச் சபதத்தினால் தெரிய வருகிறது. நெடுஞ்செழியன் என்ற பாண்டிய அரசன் மிகவும் இளையவனாக இருந்தான். அவனுடைய இளமையைக் கண்டு அவனுடைய பகைவர்கள் அவனோடு போர் புரிந்து வென்று விடலாம் என்று
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/427
Appearance