உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கந்தவேன் : கதையமுதம் எண்ணினார்கள். கேட்டு நெடுஞ்செழியனுக்குக் கோபம் வந்து அவன் சபதம் செய்தான். இவன் இளையன்' என்று அவர்கள் பேசுவதைக் "அவர்கள் என்னை இளைஞன் என்று பேசுகிறார்கள். அவர் களால் நான் தோல்வியுற்றேன் ஆனால் என்னை எந்தப் புலவர்களும் பாடாது ஒழியட்டும். குடிகள் பழி தூற்றட்டும். இரப்பவர்களுக்கு ஈயாத வறுமை எனக்கு வரட்டும் " என்றெல்லாம் சபதம் செய்கி றான். இந்தச் சபதத்தில் அவனுடைய நல்லெண்ணங்கள் தெரிகின் றன. அக்கினிமுகாசுரன் செய்த சபதத்தைப் பார்த்தோம். அதில் அவனுடைய இழிந்த மன இயல்பு புலனாகிறது. நெடுஞ்செழியன் செய்த சபதத்தில் அவனது பண்பாடு தெரிகிறது. அக்கினிமுகாசுரன் போர்க்களத்தில் வீரவாகு தேவரோடு மோதினான்; தோற்று ஓடினான். அக்கினி முகாசுரன் முதலியோர் இறத்தல் பின்பு அவன் வந்து பிரம்மாஸ்திரத்தை விட்டான். வீரவாகு தேவர் வீரபத்திராஸ்திரம் விட்டார். அது பிரம்மாஸ்திரத்தை அழித்தது. அன்னமிசை யோன்படை அழித்திடலும் வீரன் தன்னது நெடும்படை தடுப்பில்வகை ஏகி வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி மின்னுவென விரனிடை மீண்டுபடர்ந் தன்றே. (அக்கினிமுகாசுரன். 145.) [அள்ள மிசையோன் - பிரமன். வீரன் தன்னது நெடும்படை - வீரபத்திராஸ் திரம். வன்னி முகன் - அக்கினிமுகாசுரன். படர்ந்தன்று - வந்தது.) அது அக்கினி முகாசுரனைக் கொன்று, வீரவாகு தேவரிடம் வந்து சேர்ந்தது. அப்போது தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மகிழ்ச்சியின் பெருக்கினாலே தம்முடைய ஆடைகளை எல்லாம் அவிழ்த்து வீசினார்கள். பூண் துறந்தார்கள். நான் துறந்தார்கள். பிறந்த மேனிக்கு இருந்தார்களாம். புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும் துறந்தனர், உவகையால்; சொல்லும் ஆடலர்; சிறந்துடன் ஆர்த்தனர், தேவர் ; அற்றைநாள் பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார். (அக்கினிமுகாசுரன். 147.) [கலிங்கம் - ஆடை. சொல்லும் ஆடலர் - பேசவில்லை.]