உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை சூரபன்மன் ஆசுரம் என்ற இடத்தில் இருந்த சிங்கமுகனுக்கு ஆள் அனுப்பி வரும்படி சொன்னான். அப்படியே சிங்கமுகனும் தன்னுடைய இடத்திலிருந்து வீரமகேந்திரபுரம் வந்தான். அவன் வரும்போது தேவர்கள் எல்லாம் அவன் தோற்றத்தைக் கண்டு ஓடினார்கள். சூரபன்மன் அவனைப் பார்த்து, "நீ போய்ப் போர் செய்வாயாக" என்று சொன்னான். சிங்கமுகன் சூரபன்மனிடம் கூறுதல் அப்போது சிங்கமுகாசுரன், அறிவுரை கூறுவது போன்று. "அண்ணா, முருகப் பெருமான் தனக்கு மூலமும் முடிவும் இல்லா தவன். அவனைக் குழந்தை என்று நீ நினைக்கிறாய். எல்லாம் அழிந்து விடும் என்பதை நீ பார்க்கவில்லை. நான் முன்பே எத்தனையோ எடுத்துச் சொன்னேன். அவ்வளவும் உனக்கு விஷம் போல ஆகிவிட்டன. விதிதான் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும். அந்த விதியை யாரால்தான் வெல்ல முடியும் ?" மூலமும் முடிவும்இல் லாத மூர்த்தியைப் பாலன்என்று எண்ணினை; படுவது ஓர்த்திலை : ஆலம தானதே ஐய என்மொழி; மேலையின் விதியையார் வெல்லும் நீரினார்? [படுவது - மேல் விளைவதை. 味症 (சிங்கமுகாசுரன். 23,) . மேலையின் விதி - முன்பே வரையறுக்கப்பட்ட விதி.] எனக்கு நீ உத்தரவிட்டபடி நான் போருக்குப் போகிறேன். முருகப் பெருமானை நிச்சயமாக வெல்ல முடியாது. அவனை வென்றால் நான் உன்னை வந்து பார்ப்பேன். அது இல்லையேல் நிச்சயமாக எல்லோரும் அழிந்து போவார்கள். உன் மனத்திற்குத் தோன் றியதை நீ செய்வாயாக" கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின் வந்துனைக் காண்பனால் ; மற்றுஅது இல்லையேல் அந்தமது அடைவரால் ஆரும்: ஐயநீ புந்தியின் நினைந்தன புரிதி யால்என்றான். (சிங்கமுகாசுரன். 26.) (கடக்கப் பெற்றிடின் - வெல்லும் செயல் கைகூடினால்.] இவ்வாறு சொல்லிப் போருக்குப் புறப்பட்டான். 54