432 சிங்கமுகன் கூற்று கந்தவேள் கதையமுதம் அதற்குச் சிங்கமுகாசுரன் சொல்லலானான்; "இந்திரனுடைய குமாரனையும், தேவர்களையும் கொண்டுபோய் வைத்திருக்கும். சிறையிலிருந்து அவர்களை நீக்குவது என்பது சந்திரனைத் தலையில் தரித்த சிவபெருமானாலேயே முடியாது. அப்படி இருக்கக் குழந்தை யாகிய நீ எப்படி அந்தக் காரியத்தைச் செய்ய முடியும்?" இந்திர குமரன் தன்னை இமையவர் குழுவை வாரி வெந்தளை மூழ்கு வித்து வீட்டிய சிறையை நீக்கல் சந்திர மௌலி அண்ணல் தன்னினும் முடியாது என்றால் மைந்தன்நீ ஓருவன் கொல்லோ முடித்திட வல்லை? மன்னோ. 4 (சிங்கமுகாசுரன். 352.) (இந்திரகுமரன் சயந்தன். கனை - விலங்கு, வீட்டின - விழச்செல்த, வல்லை வலிமையை உடையாய்.] 86 இங்கே வந்து போர் செய்த உன்னுடைய கட்சி வீரர்கள் எல்லோரும் மாய்ந்து போனார்கள். அவர்கள் எல்லாம் உதய கிரியில் போய்க் கிடக்கிறார்கள். இங்கே மிஞ்சி இருந்தவர்கள் என் வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நீ மாத்திரம் தனியாக நிற்கிறாய். இப்படி எல்லோரும் போன பிறகுகூடப் போர் செய்வோம் என்று எதிர்க்கிறாயே. உன்னுடைய ஊக்கம் மிக நன்றாக இருக்கிறது!" என்று ஏசிப் பேசினான்', பொருதிறல் வயவர் யாரும் பூதரில் மலரும் மாய்ந்தே எரிகதிர் உதயம் புக்கார் ; ஏனையோர் நீயும் காண விரைவில்என் அகடு சேர்ந்து விளிந்தனர்: தமியன் நின்றாய்; செருவினை இழைத்தும் என்னும் ஊக்கமே சீரி தம்மா! (சிங்கமுகாசுரன். 355.) [வயவர் - வீரர். உதயம் - உதயகிரி. அகடு - வயிறு. விளிந்தனர் - இறந்தார். தமியன் - தனியனாக. இழைத்தும் - செய்வோம்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/452
Appearance