உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை 431 கண்ணுதல் முதல்வன் மைந்த, கழறுவன் ஒன்று கேண்மோ: எண்ணலர் வலியை மாற்றல் இறையவர் கடனே ; அற்றல் விண்ணவர் தமைத்தண் டித்தோம்; அவர்க்குளும் அல்லை ; வேறோர் தண்ணலன் எமருக்கு இல்லை ; நடந்தது என் அமருக்கு என்றான். (சிங்கமுகாசுரன். 848.} [கேண்மோ-கேள். எண்ணலர் - பகைவருடைய இறையவர் - அரசர்களுடைய. அற்றால் - அதனால். நண்ணலன்- பகைவன்.] முருகன் மொழிதல் "எளியவரை வலியவர் அடக்கினால், வலியவரைத் தெய்வம் அடக்கும் என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா? வலியவர் களாகிய நீங்கள் எளியவர்களாகிய தேவர்களுக்குத் செய்தீர்கள். அதற்கேற்ற தண்டனையை உங்களுக்குக் கொடுத்து, துன்பம் எல்லா அண்டங்களை ம் ஆட்சிபுரிய வந்திருக்கிறோம். தேவர்களுக்கு நீங்கள் இட்ட சிறையினை நீக்க வந்தோம். அதற்காகத்தான் சண்டை” என்று முருகப் பெருமான் சொன்னான். உறைதரும் அளியன் தன்னை வலியவன் ஒறுக்கின் நாடி முறைகெழு தண்டம் ஆற்றி அண்டங்கள் முழுவ துக்கும் இறையினைப் புரிதும்; அற்றல் நீவிர்கள் இமையோர்க்கு இட்ட சிறையினை அகற்ற வந்தேம் ; செருவும்அத் திறத்துக் கென்றன். (சிங்கமுகாசுரன். 349.) (அளியன் - இரங்கத்தக்க பலவீனன், ஒறுக்கின் - துன்புறுத்தினால், தண்டம் - கண்டனை. இறை -அரசாட்சி செருவும் - இந்தப் போரும்.] "எல்லா அண்டங்களுக்கும் நம்முடைய ஆதிக்கம் செல்லும். ஆகையால் நாம் தேவர்களுடைய துன்பத்தை நீக்க வந்தோம் என்று ஆண்டவன் சொன்னான்,