உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 கந்தவேள் கதையமுதம் இருப்பேன்" என்று சொல்கிறார். "நரகம் பெறினும் எள்ளேன் நின் திருவருளால் இருக்கப்பெறின்." விளக்கை எடுத்துக்கொண்டு இருட்டைத் தேடியது போலாகும் அது. ஆண்டவன் திருவருள் இருந்தால் அவருக்கு அப்போது அங்கே இன்பந்தான் இருக்கும். நரகம் சொர்க்கம் ஆகிவிடும். அப்பர் சுவாமிகள் ஓரிடத்தில் சொல்கிறார்; "ஆண்டவனே, புழுவாகப் பிறந்தாலும் பிறப்பேன். உன் திருவடி என் மனத்து வழுவாமல் இருந்தால், அதனால் எனக்குக் குறை வராது என்று சொல்கிறார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா நின்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தரல் வேண்டும்." வீரவாகு தேவர் இங்கே, "வெந்துயரம் மூழ்கி வினைப் பிறவி புக் கால் என்?" என்று சொல்வதும் அதை ஒத்திருக்கிறது. அதற்கு மாறாக, ஆண்டவனிடத்தில் அன்பு இல்லாமல் உலகில் ஈடுபட்ட மக்களுக்கு இந்த உலகமே பகையாக இருக்கும். கருவி கரணங்கள் பகைவர்களைப் போல இருக்கும். மனமே பெரிய இருக்கும். இந்திரியங்களின் வாயிலாகப் பல பொருளில் ஈடுபட்டு அவற்றை இந்த உலக வாழ்க்கையில் அடையும் போது, மேலும் மேலும் ஆசை வளருமேயன்றிக் குறையாது. அதனால் துன்பம் வரும். பகையாக " 93 ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம " என்று திருமூலர் பேசுவார். ஐந்து இந்திரியங்களும் இறைவனிடத்தில் உண்மையான அன்பு உடையவர்களுக்கு அநுகூலம் செய்கின்றவையாக மாறுகின்றன. மனம் கூட இறைவளை நினைத்தால் சாத்துவிக மனம் ஆகிவிடும். நம்மிடத்திலுள்ள அகப் பகை ஒழிந்துவிடுமானால், மனமும் இந்திரி யங்களும் மாறிவிடுமானால், நமக்கு என்ன துன்பம் வரும்? ஆகவே தான் வீரவாகு தேவர், எந்தை அருள்உண்டேல் எழுக்குஎன் குறை? என்றார். சிங்கமுகன் வீழ்ச்சி சிங்கமுகாசுரனுக்கும், முருகனுக்கும் பெரும்போர் நடந்தது. முருகன் விட்ட அம்புகள் வெவ்வேறு வடிவம் கொண்டு அசுரர் .